பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
1 min read
Opposition MPs walk out of parliament
22-/9/-2020
பாராளுமன்ற கூட்டத்தில் இருந்து இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பாராளுமன்றக் கூட்டம்
பராளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவை இன்று கூடியது. அவை கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசியதாவது:-
மாநிலங்கள் அவையில் இருந்து 8 எம்.பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கீழே தனியார் கொள்முதல் செய்ய முடியாது என்ற மற்றொரு மசோதாவை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்ற எங்களின் கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் வரை எதிர்க்கட்சிகள் நடப்பு கூட்டத்தொடரை புறக்கணிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு பேசும்போது, “எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உரிமை உள்ளது. எம்.பி.க்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையானது அவர்களின் செயலுக்கு எதிரானதே தவிர அவர்களுக்கு எதிரானது அல்ல” என்று கூறினார்.
வெளிநடப்பு
அதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்ட 8 எம்.பி.க்களின் உத்தரவை திரும்ப பெற கோரி அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
அவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்