இந்தியாவில் ஒரே நாளில் 75, 083 பேருக்கு கொரோனா
1 min readorona for 75,083 people one day in India
22/-9/-2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 75,083 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் இன்றும் கட்டுப்படவில்லை. கொரேனா நிலவரத்தை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( திங்கட்கிழமை) மட்டும் இந்தியா முழுவதும் 75,083 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதனால் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55 லட்சத்து 62 ஆயிரத்து 664 ஆக உயர்ந்தது.
நேற்ற மட்டும் இந்தியாவில் கொரோனாவுக்கு 1,053 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 88,935 ஆக அதிகரித்து இருக்கிறது.
தற்போது 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று மட்டும் 44 லட்சத்து 97 ஆயிரத்து 868 பேர் கொரோனாதொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.