கொரோனாவுக்கு மத்திய மந்திரி மரணம்
1 min readCentral minister passes away for corona
23-/9/2020
இந்தியாவில் முதன் முதலில் கொரோனாவுக்கு மத்திய மந்திரி ஒருவர் இறந்துள்ளார்.
கொரோனா
இந்தியாவில் சாதாரண மக்கள் முதல் முக்கிய பிரமுகர்கள் வரை கொரோனா தாக்கி படாய் படுத்துகிறது.
தமிழக்கத்தை பொறுத்தவரை முதன் முதுலில் தி.மு.க. எம்.எல்.ஏ.வான அன்பழகன் கொரோனாவுக்கு இறந்தார்.
இதனை அடுத்து வசந்த குமார்எம்.பி. கடந்த மாதம் (ஆகஸ்டு) 28 -ந் தேதி இறந்தார். பாராளுமன்ற உறுப்பினர்களில் முதலில் இறந்தவர் இவர்தான். அதன்பின் திருப்பதி தொகுதி ஓ.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யான பல்லி துர்கா பிரசாத் ராவி கடந்த 15-ந் தேதி மரணம் அடைந்தார். மறு நாள் 16-ந் தேதி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாரதீய ஜனதாஎம்.பி. அசோக் கஸ்தி இறந்தார்.
மத்திய மந்திரி
இந்த நிலையில் கொரோனாவுக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி இன்று (புதன்கிழமை ) இறந்துள்ளார்.
இவருக்கு கடந்த 11-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கடந்த சில தினங்களாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் இன்று (23/9/2020) இறந்தார்.
சுரேஷ் அங்கடி கர்நாடகாவின் பெலாகவி தொகுதி எம்.பி. யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். இவர் நான்கு முறை பாராளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிரதமர் மோடி இரங்கல்
சுரேஷ் அங்கடிக்கு மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் “சுரேஷ் அங்கடி ஒரு அர்ப்பணிப்புமிக்க பாராளுமன்ற உறுப்பினர். திறமையான மந்திரியாக இருந்த அவரின் மறைவு மிகந்்த வருத்தமளிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பாரதீய ஜனதா தலைவர் சம்பித் பத்ரா, மத்திய உள்துறை இணை மந்திரி ஜி.கிருஷ்ணன் ரெட்டி உள்பட பால் தங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.