தென்காசி மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா
1 min readIn Tenksai 46 person affected for corona today
23-/9/2020
தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் இன்று( புதன்கிழமை) ஒரே நாளில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,961 ஆக அதிகரித்தது.
இதுவரை மொத்தம் 6,360 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 636 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் கொரேனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக உள்ளது.