May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

அணைகள் நிரம்புவதால் ஆறுகளில் குளிக்க வேண்டாம்- தென்காசி கலெக்டர் எச்சரிக்கை

1 min read

Do not bathe in rivers as dams fill up- Tenkasi Collector Warning

23/-9/-2020

தென்காசி மாவட்டத்தில் அணைகள் நிரம்புவதால் எந்த நேரத்திலும் தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்றும் அதனால் ஆறு, அருவிகளில் குளிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

அணைகள்

கடந்த சில நாட்களாக தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள குண்டாறு அணை நிரம்பி உள்ளது. ராமநதி, கடனா நதி அணைகள் விரைவாக நிரம்பி வருகின்றன. எனவே எந்த நேரத்திலும் மேற்படி அணைகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் அணைகளிலோ, அணைகளின் மறுகால் பகுதிகளிலோ குளிப்பதற்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நடவடிக்கை

மேலும் தமிழகம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், பிரிவு 144 தடை உத்தரவு அமுலில் இருப்பதால் 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடுவது குற்றமாகும். எனவே அணைகள், ஆறு, குளம், தனியார் தோட்டங்களில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் என்றும் மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பருவமழை காலத்தில் பொதுமக்கள் உயிருக்கோ, உடமைக்கோ சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. பொது மக்கள் தங்களது வீட்டின் கூரைகள், சன்ஷேடுகள் ஆகியவற்றினை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறும், வீட்டின் வெளிப்புறம் தேவையற்ற டப்பாக்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் கவர்கள் இருப்பின் அவற்றில் நீர் தேங்கி கொசுப்புழு வளர வாய்ப்புள்ளதால் அவற்றை உடனே அகற்றிடுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காய்ச்சல் அறிகுறி

மேலும் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரையே பயன்படுத்துமாறும், தினசரி உப்பு கலந்த சுடுநீரில் கொப்பளிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்டுகிறார்கள். மேலும் பருவமழை காலத்தில் ஏற்படும் டெங்கு, மலேரியா, டைபாய்டு மற்றும் கொரோனா ஆகிய அனைத்து நோய்களுக்கும் காய்ச்சல் ஒரு பொதுவான அறிகுறியாக இருப்பதால் பொதுமக்கள் எவருக்கேனும் காய்ச்சல் அறிகுறி ஏற்பட்டால் சுய மருத்துவம் பார்க்காமல் உடனே அருகில் உள்ள அரசு பொது சுகாதார மையத்திற்கோ, அரசு மருத்துவமனைக்கோ சென்று பரிசோதனை மேற்கொண்டு சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.