நெல்லையில் இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் கைது
1 min readYouth arrested for abducting and raping a young girl in Nellai
23/9/2020
நெல்லை பயிற்சி மையத்திற்கு வந்த இளம்பெண்ணை கடத்தி கற்பழித்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கற்பழிப்பு
தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்த சுடலைமணி என்பவரின் மகன் ராஜேந்திரன் (வயது 21), கூலித்தொழிலாளியான இவர், தூத்துக்குடியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணுடன் நெருங்கி பழகினார். சம்பவத்தன்று அந்தப் பெண் நெல்லையில் ஒரு பயிற்சி மையத்திற்கு வந்தார். அப்போது அவரை கடத்திச் சென்று கற்பழித்ததாக கூறப்படுகிறது.
கைது
இது குறித்து பெண்ணின் பெற்றோர் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.