தமிழகத்தில், இன்று 5,470 பேர் கொரோனாவில் இருந்து குணமானார்கள்
1 min readIn Tamil Nadu, 5,470 people have recovered from corona today
24-/9/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,470 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாடுக்கு வரவில்லை. ஆனால் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையை விட டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஆறுதல்.
கொரோனா நிலவரம் பற்றிய விவரங்களை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 5,692 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 13 பேர். இவர்களையும் சேர்த்து கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,63,691 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 3,40,016 பேர். பெண்கள் 2,23,646 பேர்; மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர். தற்போது 46,405 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் ஒரே நாளில் 88,784 பேருக்கும், 90,607 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால், பரிசோதனை செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 66,08,675 ஆகவும், மாதிரிகளின் எண்ணிக்கை 68,15,691 ஆகவும் அதிகரித்துள்ளது.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 5,470 பேர் குணமாவி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,08,210 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து செல்கிறது.
66 பேர் சாவு
கொரோனாவுகு ஒரே நாளில் 66 பேர் இறந்தனர். இதில் அரசு ஆஸ்பத்திரியில் 43 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 23 பேரும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். வேறு நோய் இல்லாத 8 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9.076 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில்…
சென்னையில் ஒரே நாளில் 1,089 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 21 நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையில் மொத்தம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,59,683ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையும் 3,111 ஆக அதிகரித்துள்ளது.
பிற மாவட்டம்
கடந்த 24 மணி நேரத்தில் கோவையில் 642 பேருக்கும், திருவள்ளூரில் 533 சேலத்தில் 311 பேருக்கும், செங்கல்பட்டில் 299 பேருக்கும், கடலூரில் 250 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும், விழுப்புரத்தில் 145 பேருக்கும், திருவாரூரில் 143 பேருக்கும், நெல்லையில் 115 பேருக்கும் புதுக்கோட்டையில் 112 பேருக்கும், திருச்சியில் 126 பேருக்கும் கொரோனா உறுதிபடுத்தப்பட்டது.
சென்னைத் தவிர பிற மாவட்டங்களில் 4, 603 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 25 வது நாளாக பிற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கு கீழ் பதிவானது குறிப்பிடத்தக்கது.