அணு விஞ்ஞானி கொரோனாவுக்கு மரணம்
1 min readnuclear scientist Sekar bhasu passes away for Corona
24/9/2020
அணு விஞ்ஞானியும் அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் சேகர் பாசு கொரோனாவுக்கு மரணம் அடைந்தார்.
விஞ்ஞானி
அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவரான சேகர்பாசு அரசு பள்ளியில் படித்து, பின்னர் பொறியியல் பட்டம் பெற்றவர். இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ் அரிஹந்தின், மிகவும் சிக்கலான உலையை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றியவர். இவர் 2015 முதல் 2018 வரை இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவராக இருந்துள்ளார். இவருக்கு 2014-ல் பத்மஸ்ரீ விருது கொடுத்து அரசு கவுரவித்துள்ளது.
விஞ்ஞானி சேகர் பாசு கொரோனா தொற்று
ஏற்பட்டது. இதற்காக அவர் கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று(வியாழக்கிழமை) அவர் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.