நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கொரோனா நிலவரம்
1 min readCorona situation in Nellai, Tenkasi and Thoothukudi
24/9/2020
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கொரோனா நிலவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டு உள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் இன்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 115 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12196 ஆக அதிகரித்தது. இன்று மட்டும் கொரோனாவில் இருந்து 92 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை மொத்தம் 11053 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தற்போது மொத்தம் 947 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். நெல்லை மாவட்டத்தில் இன்று ஒருவர் இறந்தார். இதனால் கொரோனாவுகு இறந்தவர்களின் எண்ணிக்கை 196 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7016 ஆக அதிகரித்தது. இன்று 71 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை 6344 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது மொத்தம் 541 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவுக்கு ஒருவர் இறந்தார். இதனால் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இந்த மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13110 ஆக அதிகரித்தது.
இன்று 60 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை12261 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
தற்போது 729 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பலி இல்லை. இந்த மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உள்ளது.