கொரோனா பாதித்த துணை முதல்-மந்திரிக்கு டெங்கு
1 min readDengue to Corona-infected Deputy First-Minister of Delhi
25/9/2020
கொரோனா பாதித்த டெல்லி துணை முதல்-மந்திரிக்கு தற்போது டெங்கு காய்ச்சலும் வந்துள்ளது.
துணை முதல்-மந்திரி
டெல்லி மாநில துணை முதல்-மந்திரி மனீஷ் சிசோடியாவுக்கு கடந்த 14-ந் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால் அதன்பிறகும் குணம் ஆகாததால் நேற்று முன்திம் (புதன்கிழமை) டெல்லியில் உள்ள லோக் நாயக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
டெங்கு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு டெங்குவும் பாதித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும். அவர் இன்று (வியாழக்கிழமை) ஐ.சி.யு.விலிருந்து மாற்றப்பட்டுள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மனீஷ் சிசோடியா ஒரு வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் , “லோக் நாயக் மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தனக்கு சிறப்பான மருத்துவப் பணி செய்கிறார்கள். நோயாளிகளை இவர்கள் அணுகும் முறை மிகவும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.