இந்தியாவில் ஒரேநாளில் 81,177 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readIn India, 81,177 people recovered from the corona in one day
25/9/2020
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 81,177 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பற்றிய விவரங்களை தினமும் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படிஇன்று ( வெள்ளிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று(வியாழக்கிழமை) ஒரே நாளில் 86,052 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 58 லட்சத்து 18 ஆயிரத்து 571 ஆக உள்ளது.
நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 81,177 பேர் குணமாகி டிஸ் சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 47 லட்சத்து 56 ஆயிரத்து165 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 9 லட்சத்து 70 ஆயிரத்து 116 பேர் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்தவர்களில் நேற்று மட்டும் 1,141 பேர் சிகிச்சை பலனின்று இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 92,290 ஆக உயர்ந்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உ்ளளது.