எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம்
1 min readSP balasubramaiyam passes away
25/9/2020
பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று மரணம் அடைந்தார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை எம்.ஜி.எம். ஹெல்த் கேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ மற்றும் வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதன்பின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதாக அவரது மகன் சரண் கூறினார். உணவு சாப்பிடுவதாகவும், விரைவில் குணமாகி வீடு திரும்ப ஆசையாக இருப்பதாகவும் அவர் கூறிவந்தார்.
கடந்த 14-ந் தேதி அவருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் தொடர்ந்து சிகிச்சை நடந்து வந்தது.
மரணம்
இந்த நிலையில் நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் கூறியது.
அவர் இன்று ( வெள்ளிக்கிழமை) பகல் 1.04 மணிக்க மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
இரண்டு மாத காலமாக உயிருக்கு போராடிய அவர் இன்று மரணத்தை தழுவினார்.
சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இனிமையான குரலால் தமிழர்களை கட்டிப்போட்டவர் இன்று விண்ணுலகம் சென்று விட்டார்.