காஷ்மீரில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை
1 min readTwo terrorists shot dead in Kashmir
25/9/2020
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
பங்கரவாதிகள்
ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி கண்டு பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படி தேடுதல் வேட்டையில் ஈடுபடும்போது, ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஷிர்ஹமா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுகொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அந்த இடத்தில் மேலும் பயங்கரவாதிகள் யாரும் பதுங்கி இருக்கிறார்களா என்று பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.