தமிழகத்தில் ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா
1 min readCorona for 5,679 people one day in Tamil Nadu
26/9/2020
தமிழகத்தில் ஒரே நாளில் 5,679 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்ட தகவல் வருமாறு:-
தமிழகத்தில் நேற்று( வெள்ளிக்கிழமை) 5,679 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில், 5,671 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 8 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,69,370 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 182 ஆய்வகங்களில் 94,877 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 69 லட்சத்து 10 ஆயிரத்து 521 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
வெள்ளிக்கிழமை கொரோனா உறுதியானவர்களில் 3,455 பேர் ஆண்கள். 2,224 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 3,43,470. பெண்களின் எண்ணிக்கை 2,25,870. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30.
கொரோனா பாதித்தவர்களின் வெள்ளிக்கிழமை மட்டும் 5,626 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களைுயம் சேர்த்து தமிழகத்தில் மொத்தம் 5 லட்சத்து 13 ஆயிரத்து 836 குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு நேற்று மட்டுமு் 72 பேர் இறந்துள்ளனர். இதில் 37 பேர் அரசு ஆஸ்பத்திரிளிலும் 35 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 9,148 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 46,386 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.