இந்தியவில் ஒரே நாளில் 93,420 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readIn India, 93,420 people recovered from the corona in one day
26/9/2020
இந்தியாவில் கொரோனாவில் இருந்து ஒரே நாளில் 93,420 பேர் குணம் அடைந்து மீண்டனர்.
கொரோனா
இந்தியாவில் பரவும் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( சனிக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59 லட்சத்து 3 ஆயிரத்933 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9 லட்த்து 60 ஆயிரத்து 969 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறப்பு
நேற்று மட்டும் கொரேனாாவுக்கு 1,089 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 93,379 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் நேற்று மட்டும் 93,420 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளது.
இதுரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து 49 ஆயிரத்து 585 பேர் ஆகும்.
மேற்கண்ட தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
பரிசோதனை
இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 13 லட்சத்து 41 ஆயிரத்து 535 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.இந்தியாவில் இதுவரை 7 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 975 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.