கல்வான் மோதலில் 5 சீன வீரர்கள் மட்டுமே இறந்தார்களாம்
1 min readOnly 5 Chinese soldiers were killed in the Kalwan conflict?
26/9/2020
கல்வான் மோதலில் 5 சீன வீரர்கள் மட்டுமே இறந்ததாக அந்த நாடு இப்போது அறிவித்து உள்ளது.
எல்லையில் மோதல்
இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன படைகள் அடிக்கடி முயற்சி செய்து வருகின்றன.
அப்படி ஊடுருவ முயற்சிக்கும் காரணத்தால் கடந்த மே மாதம் முதல் எல்லையில் மோதல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீனப்படைகள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டது. இதனால் இரு நாட்டு வீரர்கள் இடையே ஜூன் மாதம் 15-ந் தேதி மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு வீரர்களும், கைகளால் ஒருவரை ஒருவர், கடுமையாக தாக்கிக் கொண்டனர். சீன வீரர்கள் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதில், இந்திய படையினர் 20 பேர் வீர மரணம் அடைந்தனர்.
இதில் சீன தரப்பில் பலர் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால் இதை சீனா ஒப்புக்கொள்ள வில்லை. வீரர்கள் மரணம் பற்றி எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தது.
ஒப்புக் கொண்டது
சமீபத்தில் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்தில் அமைதி பேச்சு நடந்தது. இந்த பேச்சு வார்த்தையின் போது, “கல்வான் சண்டையில், தங்கள் தரப்பில்,5 வீரர்கள் பலியாகினர் என்பதை, சீன ராணுவம் உறுதி செய்தது” என்று இந்திய அதிகாரி ஒருவர் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ” சீனர்களின் பலி எண்ணிக்கையை அந்த நாட்டு ராணுவம், எப்போதும் குறைத்து தான் அறிவிக்கும். எனவே, அவர்கள் கூறிய எண்ணிக்கையை, மூன்றால் பெருக்கி கொண்டால் மட்டுமே, சரியான பலி எண்ணிக்கை கிடைக்கும்” என்றார்.