தமிழகத்தில் இன்று 5,612 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readIn Tamil Nadu today 5,612 people recovered from the corona
தமிழகத்தில் இன்று மட்டும் 5,612 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடரும் பட்சத்தில் குணமானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது ஆறுதலான விசயம். தமிழகத்தில் கொரோனா பற்றிய விவரங்களை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( சனிக்கிழமை) மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 5,647 பேருக்கு கொரோனா தொன்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில், 5,645 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 2பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,75,017 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 182 ஆய்வகங்களில்94,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 70 லட்சத்து 4 ஆயிரத்து 558 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 3,448 பேர் ஆண்கள். 2,199 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 3,46,918. மொத்த பெண்களின் எண்ணிக்கை 2,28,069. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30 .
5,612 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,612 பேர் குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 448 ஆக உள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்த 85 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 35 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,233 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 46,336 பேர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
சென்னையில்….
சென்னையில் மட்டும் 1,187 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையைத் தவிர இன்று கோவையில் 656 பேருக்கும், சேலத்தில் 296 பேருக்கும், செங்கல்பட்டில் 259 பேருக்கும், திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும், திருப்பூரில் 188 பேருக்கும், தஞ்சாவூரில் 179 பேருக்கும், விழுப்புரத்தில் 161 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், நீலகிரியில் 145 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இன்று சென்னையில் 23 பேரும், சேலம், தஞ்சாவூரில் தலா 6 பேரும், கோவை, வேலூரில் தலா 5 பேரும், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திருப்பூரில் தலா 4 பேரும், ஈரோடு, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், மதுரை, நாகப்பட்டினத்தில் தலா 2 பேரும், அரியலூர், கடலூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரத்தில் தலா ஒருவரும் கொரோனாவால் இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று 867 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கோவையில் 595 பேரும், காஞ்சிபுரத்தில் 340 பேரும், கடலூரில் 276 பேரும், தஞ்சாவூரில் 274 பேரும், செங்கல்பட்டில் 256 பேரும், சேலத்தில் 213 பேரும், தர்மபுரியில் 169 பேரும், திருவள்ளூரில் 166 பேரும், திருப்பூரில் 158 பேரும், திருவண்ணாமலையில் 149 பேரும், வேலூரில் 144 பேரும், விழுப்புரத்தில் 134 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.