எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்காக மோட்ச தீபம் ஏற்றினார் இளைய ராஜா
1 min readThe Ilaya Raja lit the Mocha lamp for SP Balasubramaniam
26/9/2020
எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக இசையமைப்பாளர் இளைய ராஜா திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றியிருக்கிறார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று ( வெள்ளிக்கிழமை) மரணம் அடைந்தார். முதலில்கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. பின்னர் கொரோனா இல்லாத நிலையில் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு மரணத்தை தழுவினார்.
அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணைத் தோட்டத்தில் தமிழக அரசின் போலீஸ் மரியாதையுடன் இன்று(சனிக்கிழமை) நல்லடக்கம் செய்யப்பட்டது.
எஸ்.பி.பி. மறைவுக்கு ஏற்கனவே இளையராஜா இரங்கல் தெரிவித்து இருந்தார். அதில் எஸ்.பி.பி. இல்லாத உலகம் தனக்கு சூன்யமாக தெரிவதாக குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அவர் இன்று எஸ்பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்லவில்லை. அவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாட்டார்.