இந்தியாவில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
1 min readIncrease in the number of healed than corona victims in India
27-/9/2020
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பை விட குணம் அடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. கொரோன பரவல் நிலவரம் பற்றி தினமும் மத்திய சுகாதார அமைச்சம் தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
இந்தியாவில் இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 88,600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 59,92,533 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு நேற்று மட்டும் 1,124 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை கொரோனாவுக்கு
மொத்தம் 94,503 பேர் இறந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 92043 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால்குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 41 ஆயிரத்து 628 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது புதிய பாதிப்புகளை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆறுதலான தகவல்.
இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு ஆஸ்த்திரிகளில் தற்போது 9,56,402 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
உயிரிழப்பு 1.58 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.46 சதவீதமாகவும் உள்ளது.
மேற்கண்ட தகவல்கள் மத்தி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 59 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை உயர்ந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் எண்ணிக்கை 7.12 கோடியாக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் இந்தியாவில் 9,87,861 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 7 கோடியே12 லட்சத்து57 ஆயிரத்து 836 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.