தமிழகத்தில் இன்று மட்டும் 5,706 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர்
1 min readIn Tamil Nadu, 5,706 people recovered from Corona in today
27/9/2020
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 5,706 பேர் குணமடைந்து மீண்டனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவத்தை தினமும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 5,786 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் 5பேர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் 3,544 பேர் ஆண்கள். 2,247 பேர் பெண்கள். கொரோனா பாதிக்கப்பட்ட மொத்த ஆண்களின் எண்ணிக்கை 3,50,462. பெண்களின் எண்ணிக்கை 2,30,316. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 30.
மீண்டவர்கள்
தமிழகத்தில் இன்று மட்டும் 5,706 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி மீண்டனர். இதனையடுத்து கொரோனாவில் குணமானவர்கள் மொத்த எண்ணிக்கை 5,25,154 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 80 பேர் இறந்துள்ளனர். இதில் 53பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 27 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,313 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில்…
சென்னையில் இன்று மட்டும் 1,280 பேருக்கு
கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மற்ற மாவட்டங்களில் 4,511 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. கோவையில் 596, சேலத்தில் 378, திருப்பூரில் 282 பேருக்கும், செங்கல்பட்டில் 296 பேருக்கும், கடலூரில் 256 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு இருக்கிறது.