தமிழகத்தின் வில்லுப்பாட்டை புகழ்ந்த பிரதமர் மோடி
1 min readPrime Minister Modi praised the Villuppattu of Tamil Nadu
27/9/2020
தமிழகத்தின் தனித்துவமாக விளங்கும் வில்லுப்பாட்டை தனது மன் கி பாத் நிகழ்ச்சியில் புகழ்ந்து பேசினார். கதை சொல்லும் கலையை வளர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
‘மன் கி பாத்’ என்று அழைக்கப்படும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். இன்று அவர் பேசியதாவது:-
மனித நாகரீகம் எத்தனை தொன்மையானதோ, அதே அளவுக்கு தொன்மையானது கதைகளின் வரலாறும். எங்கே ஆன்மா இருக்கிறதோ அங்கே ஒரு கதையும் உண்டு. கதைகள், மனிதர்களின் படைப்பாற்றலையும் புரிந்துணர்வையும் முன்னுறுத்துகினறன.
வில்லுப்பாட்டு
கதை சொல்லுவது என்ற ஒரு வளமான பாரம்பரியத்தின் சொந்தக்காரர்கள் நாம். நாம் கீதோபதேசம், பஞ்சதந்திரம் போன்ற பாரம்பரியம் உடையவர்கள் என்பது நமக்கு பெருமிதம் அளிக்கும் விஷயம். இவற்றின் மூலம் விவேகம், புத்திக்கூர்மை நிறைந்த விஷயங்களை எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாகிறது.
நம் நாட்டில், பல வகையான நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் உள்ளது. தமிழகம், கேரளாவில் கதைகள் சொல்லுபவர்கள் மகிவும் சுவாரசியமாக சொல்வார்கள். வில்லுப்பாட்டு மூலம் கதையை இசை கலந்து சொல்லுவார்கள்.
இப்போதெல்லாம்
இணைய தளம் மூலம்…
இணையவழியில் கதை சொல்லும் பாணி உருவாகியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த வித்யா வீரராகவன், கீதா ராமானுஜன் ஆகியோர் இதில் ஈடுபட்டுள்ளனர். கண்டிப்பாக, அவர்களை பற்றி சமூக ஊடகங்களில் பகரிந்து கொள்ளுங்கள்.
நமது நாட்டின் புதிய தலைமுறையினருக்கு நமது மகத்தான மனிதர்கள், மகத்தான தாய்மார்கள்- சகோதரிகளைப் பற்றி கதைகள் மூலம் தெரிவித்து, அவர்களோடு இணைந்து இந்தக் கதை சொல்லுதல் கலையை எவ்வாறு பிரபலபடுத்துவது என்பதை அறிய வேண்டும்
வீடுகள் தோறும் நல்ல கதைகள் சொல்லப்பட வேண்டும். நல்ல கதைகளை குழந்தைகள் கேட்க வேண்டும். இது மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த வழியில் நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
ஒவ்வொரு குடும்பமும் வாரத்தில் ஒரு நாள் ஒன்றாக அமர்ந்து குழந்தைகளுக்கு கதை சொல்லாம். சுதந்திர போராட்டத்தில் நாம் சந்தித்த பிரச்சினைகளை கதைகள் மூலம் எடுத்து சொல்ல வேண்டும்
கருணை, புரிந்துணர்வு, பராக்கிரமம், தியாகம், வீரம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு தலைப்பை தேர்வு செய்து குடும்ப உறுப்பினர்கள் ஆளுக்கொரு கதையை கூற வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாட இருக்கிறோம். நாம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது நடந்த சம்பவங்களை எடுத்துக்கூறி குழந்தைகளை உத்வேகப்படுத்த வேண்டும்.
குறிப்பாக 1857 முதல் 1947 வரையிலான அனைத்து சிறிய பெரிய சம்பவங்களை நமது புதிய தலைமுறையினருக்கு கதைகள் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.