April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 27 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூடப்படும்

1 min read

27 engineering colleges will be closed in the state

28/9/2020
தமிழகத்தில் 27 என்ஜினீயரிங் கல்லூரிகளை மூட அனுமதி கோரப்பட்டு உள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தரவரிசை

தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
இதில் சஷ்மிதா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார். மாணவர் நவநீதகிருஷ்ணன் 2-வது இடத்தையும், மாணவி காவ்யா 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதன் பின்னர் அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள மாணவர்களை வாழ்த்துகிறேன். தரவரிசைபட்டியலில் தவறு ஏதேனும் இருந்தால் மாணவர்கள் புகார் அளிக்கலாம். அது பின்னர் திருத்தி வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இறுதிப்பட்டியல் 6ம் தேதி வெளியிடப்படும்.
1,12,406 பேர் விண்ணப்பம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 461 கல்லூரிகளுக்கு கவுன்சிலிங் நடக்கும்.

27 கல்லூரிகள்

இந்த ஆண்டு 27 கல்லூரிகளை மூடுவதற்கான அனுமதி கேட்கப்பட்டுள்ளது. 8 கல்லூரிகள் புதிதாக திறக்க அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை அறியலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.