April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்?

1 min read

Who is the First-Ministerial candidate? in ADMK

28/9/2020

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் யார் என்பது சென்னையில் நடந்த அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் வேட்பாளர்

சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதில் அ.தி.மு.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பதில் அந்த கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமிதான் அடுத்த தேர்தலிலும் முதல்-அமைச்சர் வேட்பாளராக இருக்க வேண்டும் அவரது ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அவரை முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் அடுத்த தேர்தலில் முதல்-அமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

7-ந் தேதி

செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
வருகிற 7-ந் தேதி அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, “முதல்-அமைச்சர் வேட்பாளர் குறித்து எந்த மனக்கசப்பும் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் அறிவிப்பு வரும் அனைவரின் மனம் பாதிக்காத வகையில் கட்சியின் நலன் கருதி அறிவிப்பு வரும்.” என்று கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.