June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஒரே நாளில் 5,589 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 5,589 people one day in Tamil Nadu

28-/9/-2020

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,589 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தினமும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று( திங்கட்கிழமை) ஒரே நாளில் மட்டும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 86 ஆயிரத்து 397 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் இன்று ஒரே நாளில் 5,554 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் கொரோனாவுக்கு 70 பேர் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில்..

சென்னையில் மட்டும் கொரோனா பாதித்த 1,64,644 பேரில் 1,50,522 பேர் குணமடைந்துள்ளனர். 11,043 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3,179 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதித்தவர்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகள் 23,534. 13 – 60 வயதுள்ளவர்கள் 4,87,265 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75,598 பேர்.

இன்று கொரோனா பாதித்த 5,589 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 1,283 பேர். கோவையை சேர்ந்த 587 பேருக்கும், செங்கல்பட்டை சேர்ந்த 249 பேருக்கும், கடலூரை சேர்ந்த 162 பேருக்கும், ஈரோட்டை சேர்ந்த 133 பேருக்கும், நாமக்கல்லை சேர்ந்த 146 பேருக்கும், நீலகிரியை சேர்ந்த 137 பேருக்கும், சேலத்தை சேர்ந்த 256 பேருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த 180 பேருக்கும், திருவள்ளூரை சேர்ந்த 249 பேருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த 151 பேருக்கும், தஞ்சாவூரை சேர்ந்த 180 பேருக்கும், திருவாரூரை சேர்ந்த 128 பேருக்கும், திருப்பூரை சேர்ந்த 198 பேருக்கும், வேலூரை சேர்ந்த 135 பேருக்கும் விழுப்புரத்தை சேர்ந்த 139 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இன்று செங்கல்பட்டில் 443 பேரும், சென்னையில் 921 பேரும், கோவையில் 459 பேரும், கடலூரில் 168 பேரும், தர்மபுரியில் 124 பேரும், காஞ்சிபுரத்தில் 144 பேரும், மதுரையில் 124 பேரும், நாகையில் 107 பேரும், நாமக்கல்லில் 195 பேரும், நீலகிரியில் 123 பேரும், புதுக்கோட்டையில் 118 பேரும், சேலத்தில் 260 பேரும், தஞ்சாவூரில் 230 பேரும், திருவள்ளூரில் 239 பேரும், திருவண்ணாமலையில் 108 பேரும், திருவாரூரில் 114 பேரும், திருநெல்வேலியில் 101 பேரும், திருப்பூரில் 217 பேரும், திருச்சியில் 101 பேரும், வேலூரில் 153 பேரும், விழுப்புரத்தில் 139 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *