தமிழ்நாட்டில் இன்று 5,659 பேருக்கு கொரோனா- 5,610 பேர் டிஸ்சார்ஜ்
1 min readCorona to 5,659 people in Tamil Nadu today – 5,610 people discharged
30/9/2020
தமிழகத்தில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதேநேரம் இன்று மட்டும் 5,610 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர்.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று ( புதன்கிழமை)வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று புதிதாக 5,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 67 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவை கொரோனாவுக்கு 9,520 பேர் இறந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,610 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 5 லட்சத்து 41 ஆயிரத்து 819 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
தற்போது 46,263 பேர் பல்வேறு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 1,295 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.