October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

அக்டோபர்- 2020 மாத ராசிபலன்கள்

2 min read


Rasi palan for October 2020 by Kaliyoor Narayanan

மேஷம்


மேஷ ராசி அன்பர்களே! இம்மாதம் சூரியன் 17-ந் தேதி வரையும்,சுக்கிரன் 23-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார். குரு மாதம் முழுவதும்நற்பலனை கொடுப்பார். மேலும் புதன் 8-ந் தேதி வக்கிரம் அடைந்து துலாம் ராசியில் இருந்த கன்னி ராசிக்கு மாறி நற்பலனை தருவார்.
குருவால்பொருளாதார வளம் மேம்படும். எடுத்த எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும். சூரியனால் மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.ஆனால்17-ந் தேதிக்குப் பிறகு வீண்விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
குடும்பம்: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் பெருமை காணலாம். வீட்டில் குதூகலமான பலன்களை காணலாம்.பெரியோர்களின் ஆதரவும்,ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள்லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை 8-ந் தேதிக்கு பிறகு மறையும். 11,12-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. ஆனால் 26,27-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.3,4,5,31-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோம்: சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். 8-ந் தேதிக்கு பிறகு புதன் துணையோடு உயர்ந்த நிலையை எட்டி பிடிப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். புதியபதவி கிடைக்கும். சிலர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்க பெறலாம். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். 24,25-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: வியாபாரத்தில் அதிக லாபத்தை காண்பீர்கள்.பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணம் சாதக பலனை கொடுக்கும். புதிய வியாபாரத்தில் ஓரளவு வளர்ச்சி காணலாம். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.15,16-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவை பெறலாம். 1,2,6,7,28,29,30-ந் தேதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.. பண விரயம் ஆகலாம்.
பொதுநலம்:கலைஞர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.23-ந் தேதிக்கு பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தடை வரலாம். சமூகநல சேவகர்கள் அரசியல்வாதிகள் ஓரளவு பலனை எதிர்நோக்கலாம். புகழ் கவுரவத்திற்கு பங்கம் வராது.
மாணவர்கள்: தற்போது சுமாரான பலனையே அனுபவித்து வந்தாலும் 8-ந் தேதிக்கு பிறகு புதன் சாதகமாக காணப்படுவதால் இந்த மாதம் நல்ல பலனை காணலாம். பொது அறிவு வளரும் ஆசிரியர்களிடம் நன்மதிப்பு பெறுவர்.
விவசாயம்: மகசூல் சீராக இருக்கும். அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருந்தாலும், அதற்கான வருவாய் கிடைக்கும். பசு மற்றும் கால்நடை மூலம் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 8-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. கணவனிடத்தில் அன்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். 8,9,10-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன் கிடைக்க பெறுவீர்கள். 17,18-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உடல் நலம் தேறும். 17-ந் தேதிக்கு பிறகு சிறு சிறு உபாதைகள் வரலாம். அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம் 26-ந் தேதிக்கு பிறகு செவ்வாயால் உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். 13,14,21,22,23-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 19,20-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை.வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 4,5 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு, பச்சை நலம் தரும் நிறங்கள்.1,2,7,8,9,10,16,17,18,19,23,24,28,29 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு:சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்17-ந் தேதிக்கு பிறகு சூரிய வழிபாடு செய்யுங்கள்.

                           ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே! இம்மாதம் சூரியன்18-ந் தேதியும், செவ்வாய் 26-ந் தேதியும் சாதகமான இடத்துக்கு மாறுகிறார்கள். புதன் 8-ந் தேதி வரை துலாம் ராசியில் இருந்து நன்மை கொடுப்பார். சுக்கிரன் 23-ந் தேதி இடம் மாறினாலும் மாதம் முழுவதும்நற்பலனை தருவார்.மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.23-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.பக்தி உயர்வு மேம்படும்.புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.
குடும்பம்: எடுத்த காரியம் வெற்றி அடையும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். 8-ந் தேதிக்கு பிறகு வீட்டில் குதூகலம் சற்று குறையும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போக வேண்டும். பிள்ûள்கள் வகையில் எதிர்பார்த்த பயன் கிடைக்காது. 1,2,28,29,30-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 17,18-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் மனக்கிலேசம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். 6,7-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பார்கள். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகம்: பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும்.26,27-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். 26-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம்: அலைச்சல் இருக்கும். மாத முற்பகுதியில் எதிரிகள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.17-ந் தேதிக்குப் பிறகு பிற்போக்கான நிலை படிப்ப டியாக குறையும். பணப்புழக்கம் அதிகரிக்கும். லாபம் கூடும்.பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். 23-ந் தேதிக்குப் பிறகு கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும்.17,18-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் வரும். 3,4,5,8,9,10,31-ந் தேதிகளில் உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களுக்கு வரவேண்டிய புகழ், பாராட்டு கிடைக்கும்.பொதுநல சேவகர்கள்சீரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள் 26-ந் தேதிக்குப் பிறகு உயர்ந்த அந்தஸ்தை பெறலாம்.
மாணவர்கள்:8-ந் தேதிக்குப் பிறகு அதிகமாக படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடக்கவும்.
விவசாயிகள்: உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். பாசிபயறு நெல், பழவகைகள் போன்றவற்றின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்காது. 26-ந் தேதிக்குப் பிறகு புதிய சொத்துகள் வாங்கும் எண்ணம் கைகூடும். விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்:மிகவும் உற்சாகமாக காணப்படுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். தோழிகளால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர் 8-ந் தேதிக்குப் பிறகு புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் குடும்பத்தில் பொறுமையை கடைபிடிக்க வேண்டியதிருக்கும்.26-ந் தேதிக்குப் பிறகு பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் 11,12-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.19,20- ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்- மேம்பாடு காண்பர்.17-ந் தேதிக்கு பிறகு சூரியனால் இருந்து வந்த உபாதைகள் பூரண குணம் அடையும். மருத்துவச் செலவு குறையும்.பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் மறையும்.24,25-ந் தேதிகளில்உடல் நலம் பாதிப்பு வரலாம். வயிறு பிரச்சினைவரும். 15,16-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.21,22,23-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 1,9 அதிர்ஷ்ட எண் ஆகும். வெள்ளை17-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் ஆகியவை உங்களுக்கு யோகம் தரும் நிறங்கள்.1,2,6,7,11,12,17,18,19,20,26,27,28, 29,30 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்கள் ஆகும்.
வழிபாடு:நாக தேவதையை வணங்கி வாருங்கள்.ராகு காலத்தில் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். வயதான மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.17-ந் தேதிவரை அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு சூரிய வழிபாடு நடத்துங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

                   மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே! இம்மாதம் புதன் 8-ந் தேதி வக்கிரம் அடைந்து துலாம் ராசியில் இருந்த கன்னி ராசிக்கு மாறி நற்பலனை தருவார். செவ்வாய் 26-ந் தேதி வரை நற்பலனை தருவார். அதோடு வழக்கமான குரு,கேது சுக்கிரனின் நற்பலன்களும் தொடரும். பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு-மனை வாகனம்வாங்க நினைப்பவர்கள் 26-ந் தேதிக்குள் பயன்படுத்திக் கொள்ளவும்.
குடும்பம்: சுபநிகழ்ச்சிகள் நடக்கும். 8-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பொருள் சேரும். மகிழ்ச்சி அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். 8,9,10-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.குடும்ப சுகம் மேம்படும்.விருந்து-விழா என சென்று வருவீர்கள்.3,4,5,31-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.
உத்தியோகம்: குரு, சுக்கிரன் பக்கபலமாக இருப்பதால் உத்தியோகம் பார்ப்பவர்கள் நல்ல பலனை காணலாம். வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.கோரிக்கைகள் நிறைவேறும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் 8-ந் தேதிக்கு பிறகு ஒன்று சேருவர். 1,2,28,29,30-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம். எதிலும் வெற்றி காணலாம்.17-ந் தேதி வரை பெண்களிடம் விரோதம் ஏற்படும்.கவனம் தேவை. பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கை களை 26-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
வியாபாரம்: நல்ல லாபத்தை காணலாம். புதிய வியாபாரம் சிறப்படையும்.பகைவர்கள் வகையில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் 8-ந் தேதிக்கு பிறகு வீடு திரும்புவர். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 17-ந் தேதிக்கு பிறகு மறையும்.ஆனால் அதன்பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். 6,7,11,12-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். பொருளாதார நஷ்டம் ஏற்படலாம். பண விரயம் ஆகலாம்.19,20-ந் தேதிகளில் நல்ல வருமானம் கிடைக்கும்.
கலைஞர்கள்: சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல தொண்டு செய்பவர்களுக்கு புகழ், கவுரவத்திற்கு பங்கம் வராது. அரசியல்வாதிகள் சிறப்பான பலனை காண்பர்.
மாணவர்கள்: கல்வியில் சிறந்த நிலையில் இருப்பர். போட்டிகளில் வெற்றி பெறலாம் 8-ந் தேதிக்கு பிறகு காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள்: நல்ல வருவாயை காணலாம். பாசி பயறு நெல்,கொள்ளு,துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் போன்ற பயிர்கள் மூலம் நல்ல மகசூலை பெறுவர்.ஆடு,கோழி,பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். புதிய சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.
பெண்கள்: திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். கணவனின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேல்அதிகாரிளின் ஆதரவும் ஆலோசனனையும் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 23-ந் தேதிக்கு பிறகு மதிப்பு,மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 13,14-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன் வாங்கலாம்.21,22,23-ந் தேதிகளில் சுகம் ஏற்படும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 26-ந் தேதிக்கு பிறகு செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. அண்டை வீட்டார்களின் தொல்லை ஏற்படும்.
உடல் நலம்: சுமாராக இருக்கும். 26-ந் தேதிக்குபிறகு செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. 26,27-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். 17,18-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படும். 24,25-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்: 1,7 அதிர்ஷ்ட எண்கள். வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட நிறங்களாகும். 1,2,3,4,5,8,9,10,13,14,19,20,21,22,23,28,29,30,31 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும்
வழிபாடு: சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சூரியனை காலையில் வணங்குங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள் 26-ந் தேதிக்கு பிறகு செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட தவறாதீர்கள். முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் உடல்பிரச்சினைகள் மறையும்.

                   கடகம்

கடக ராசி அன்பர்களே! இம்மாதம் சனி, ராகு, சுக்கிரன் ஆகியோரின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். அதோடு புதன்8-ந் தேதி வரையும் சூரியன் 16-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள். பொருளாதார வளத்துக்கு எந்தக் குறையும் கிடையாது. எடுத்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கலாம். உங்கள் ஆற்றல் மேம்படும்.
குடும்பம்- மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. 23-ந் தேதிக்கு பிறகு வீட்டில் குதூகலம் அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.11,12- தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர்.பணம் கிடைக்கும்.விருந்து,விழாஎன சென்று வருவீர்கள். 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர் களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 17,18-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரவாய்ப்பு உண்டு. சற்று விலகி இருக்க வேண்டும்.
உத்தியோகம்: அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 23-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பும் வருமானமும் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பதவி உயர்வுக்கு தடை வராது.17-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் ஒதுங்கி இருக்கவும். 3,4,5,31-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்:பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர் கள்.அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். லாபம் சிறப்பா இருக்கும். வணிகத்தை விரிவுப்படுத்தலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 8-ந் தேதிக்கு பிறகு பகைவர்களின் தொல்லை அவ்வப்போது தலைதூக்கும்.அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்பட- வில்லை. கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.21,22,23-ந் தேதிகளில் எதர்பாராத வகையில் பணவரவுக்கு வாய்ப்பு இருக்கிறது.8,9,10,13,14-ந் தேதிகளில் உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். பொருள் விரையம், நஷ்டம் உருவாகலாம்.
மாணவர்கள்:சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.
கலைஞர்கள்: புகழ், பாராட்டு கிடைக்கும். நல்ல பணப்புழக்கத்தில் இருப்பர். சமூகநல சேவகர்கள் திருப்திகரமாக இருப்பர். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள்எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை.19,20-ந் தேதிகளில் சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர்.
விவசாயம் சிறக்கும். என்ன பயிர் செய்தாலும் நல்ல லாபம் கிடைக்கும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள்: பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். குடும்பத்தரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் வீட்டிற்கு பெருமை கிடைக்கும்.சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபத்தில் குறை இருக்காது. வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.15,16-ந் தேதிகளில் புத்தாடை ஆபரணங்கள் வாங்கலாம். 26-ந் தேதிக்கு பிறகு திருட்டு களவு பயம் நீங்கும்.பயண பீதி மறையும்.
உடல்நலம்: சிறப்படையும். பித்தம், கண் தொடர்பான நோய் குணம் அடையும். மருத்துவசெலவு குறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. செவ்வாயால் ஏற்பட்ட உஷ்ணம், தோல், தொடர்பான நோய் 26-ந் தேதிக்கு பிறகு மறையும். 1,2,28,29,30-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.26,27-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 4,6 அதிர்ஷ்டமான எண்கள்.கருப்பு,நீலம்ஆகிய நிறங்கள் அதிர்ஷ்டத்தை தரும் நிறங்கள் ஆகும். 3,4,5,6,7,11,12,15,16,21,22,23,24,25,31 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: புதன் கிழமை குலதெய்வத்தை வழிபட்டு வாருங்கள். ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவியை செய்யுங்கள்.முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். நவக்கிரங்களில் செவ்வாயை வழிபட்டு துவரை தானம் செய்யலாம். துர்க்கை வழிபாடு உங்கள் மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். 16-ந் தேதிக்கு பிறகு தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள்.

                  சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே! இந்த மாதம் கூடுதல் பலன்கள் நடக்கும். அதற்கு காரணம் 17-ந் தேதி சூரியன் 3-ம் இடத்திற்கு சென்று பல்வேறு நன்மைகளை தரஉள்ளார். மேலும் குரு,சுக்கிரன் உங்களுக்கு மாதம் முழுவதும் சாதகபலன் கொடுப்பார்கள். பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு, மரியாதை கூடும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும்.
குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு கூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். குறிப்பாக 13,14-ந் தேதிகளில் அவர்களால் முன்னேற்றம் பெறலாம்.பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 8,9,10ஆகிய நாட்களில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 19,20-ந் தேதிகளில் அவர்கள் வகையில் வீண் விரோதம் உருவாக வாய்ப்பு உண்டு. எனவே சற்று ஒதுங்கி இருக்க வேண்டும். புதனால் 8-ந் தேதிக்கு பிறகு அநாவசிய விவாதத்தை தவிர்க்கவும். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.
உத்தியோகம்: அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கான பலன்கள் கிடைக்கும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். அரசுஊழியர்கள் சற்று கவனமாக இருப்பது நல்லது. சிலருக்கு கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். ஆனால் 6,7-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர் நோக்கலாம்.எதிலும் வெற்றி காணலாம். 16-ந் தேதிக்கு பிறகு இடமாற்ற பீதி அடியோடு மறையும். பதவி உயர்வு கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
வியாபாரிகள்: பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரத்திற்காக அதிக முதலீடு செய்ய வேண்டாம். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன 8-ந் தேதிக்கு பிறகு மறையும். 16-ந் தேதிக்கு பிறகு வீண் செலவினங்கள் இருக்காது. நல்ல லாபம் கிடைக்கப்பெறுவர். பணப்புழக்கம் அதிகரிக்கும்.வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். 11,12,15,16-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 24,25-ந் தேதிகளில் எதிர்பாராôத பண வரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள்: புகழோடு காணப்படுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கப்பெறுவர். 23-ந் தேதிக்கு பிறகுஅரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். சமூகநல சேவர்களுக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். அரசியல்வாதிகள் சுமாரான பலனையே காண்பர். பதவி கிடைப்பதில் தாமதமாகும்.சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம்.கவனம் தேவை.
மாணவர்கள்: சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும். ஆசிரியர்களின் உதவியை கேட்டுப் பெறவும்.
விவசாயிகள்: அதிகமாக உழைக்க வேண்டும். அதற்கான பலன்கள் கிடைக்கும். பயறு வகைகள், பழ வகைகள் மூலம் நல்ல வருவாய் காணலாம். புதிய சொத்து வாங்க எண்ணத்தை தள்ளி வைக்கவும்.வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்: குதூகலத்தை காணலாம். மகிழ்ச்சியோடு காணப்படுவர்.சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.வேலையில் மேல் அதிகாரிகளின் ஆதரவும், சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 17,18-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். 26,27-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: உடல் நலம் சிறப்படையும். 16-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான உபாதை பூரண குணம் ஆகும். 3,4,5,31-ந் தேதிகளில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். வயிறு பிரச்சினைவரும். 26-ந் தேதிக்கு பிறகு உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.21,22,23-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர். 1,2,28,29,30-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 1,9 அதிர்ஷ்டம் தரும் எண்கள். மஞ்சள்,வெள்ளை16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் அனுகூலத்தை தரும் நிறங்கள் ஆகும். 6,7,8,9,10,13,14,17,18, 24,25,26,27 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவகிரகங்களை சுற்றி வாருங்கள்.ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஆஞ்சநேயரை சனிக்கிழமை தரிசனம் செய்யுங்கள். புதன் கிழமை குலதெய்வத்தை வழிபட்டு ஏழைகளுக்கு பாசிபயறு தானம் கொடுங்கள்.16-ந் தேதி வரை சூரிய தரிசனம் செய்யுங்கள்.

                      கன்னி

கன்னி ராசி அன்பர்களே! இந்த மாதத்தை பொறுத்தவரை கேது மட்டும் மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். மேலும் சுக்கிரன் 23-ந் தேதி உங்கள் ராசிக்கு வந்து நற்பலனை தருவார். மற்றய கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் அவ்வப்போது தடைகள் வரலாம் ஆனால் இறை அருள் தொடர்ந்து இருப்பதால் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பொருளாதார வளம் சிறப்படையும். சூரியனால் ஏற்பட்ட அலைச்சலும்,சோர்வும் 16-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குடும்பம்: கேதுவால் பக்தி உயர்வு மேம்படும். மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருக்கும். 23-ந் தேதிக்கு பிறகு பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். சுகம் கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 15,16-ந் தேதிகளில் சகோதரிகள் மூலம் பணஉதவி கிடைக்கும். 11,12-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.ஆனால் 21,22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண்விரோதம் வரலாம். எனவே சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.
உத்தியோகம்: புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர்,செல்வாக்குக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன 8-ந் தேதிக்கு பிறகு மறையும். 23-ந் தேதிக்கு பிறகு சிறப்பான நிலையில் காணப்படுவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். 8,9,10-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்துக்கு மாற்றம் கிடைக்கும்.
வியாபரிகள்: கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். அரசின் சலுகை கிடைக்கும். நல்ல வளர்ச்சி காண்பர்.16-ந் தேதிக்கு பிறகு பொருள் விரயம் ஏற்படும்.பகைவர்களின் இடையூறு அவ்வப்போது தலைதூக்கும். 23-ந் தேதிக்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 13,14,17,18 ஆகிய தேதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்கலாம். 26,27-ந் தேதிகளில் திடீர் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள்: முயற்சிகளில் இருந்த தடை,பொருள் நஷ்டம் 23-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு சிறப்பான புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.சமூகநல சேவகர்கள் மதிப்பு மரியாதையுடன் இருப்பர். அரசியல்வாதிகள் சீரான நிலையில் காணப்படுவர். புதிய பதவி கிடைப்பது அரிது. 24,25-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது கெட்டசகவாசத்திற்கு விடை கொடுப்பர்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காண்பர். பயறு, நெல் போன்ற தானிய வகைளில் நல்ல வருமானத்தை காணலாம். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறஇயலாது.. வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்
பெண்கள்: மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் . 19,20-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 1,2,28,29,30ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். சகோதரர்களால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.. புதனால் 8-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.
உடல்நலம்: 16-ந் தேதிக்கு பிறகு கண் தொடர்பான சிறு சிறு உபாதைகள் வரலாம். உஷ்ணம், தோல், தொடர்பான நோய், பித்தம் சம்பந்தமான இடர்பாடுகள் 23-ந் தேதிக்கு பிறகு பூரண குணமாகும். பயணத்தின் போது கவனம் தேவை. 6,7-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 3,4,5,31-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 5,7 யோகம் தரும் எண்கள். வெள்ளை, சிவப்பு ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்களாகும்.1,2,8,9,10,11,12,15,16,19,20,26,27,28,29,30ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்து, காக்கைக்கு அன்னமிடுங்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள்.

                      துலாம்

துலாம் ராசி அன்பர்களே இம்மாதம் சனி,சுக்கிரன் நன்மை தரும் நிலையில் உள்ளார். மேலும் செவ்வாய் 26-ந் தேதி வக்கிரம் அடைந்து மேஷ ராசியில் இருந்த மீன ராசிக்கு மாறி நற்பலனை தருவார். அப்போது அவரால் பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.புதிய வீடு-மனை வாகனம் வாங்குவதற்கான காலம் கனிந்து வரும்.
சனி பகவான் காரிய அனுகூலத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார். வீண் செலவை குறைக்கவும். மதிப்பு மரியாதைக்கு எந்த பாதகமும் ஏற்படாது.
குடும்பம்: பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். தம்பதியினரி -டையே ஒற்றுமை நிலவும். புதனால் வீட்டினுள் இருந்த பிரச்சனை, உறவினர்கள் வகையில் மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன 8-ந் தேதிக்கு பிறகு மறையும். 17,18-ந் தேதிகளில் பெண்களால் பெருமை கொள்வீர்கள். 13,14-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 24,25- ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: உத்தியோகத்தில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு.கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அலைச்சல் ஏற்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு சுமாராகவே இருக்கும். கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். இதனால் வேலை யில் வெறுப்புணர்ச்சி ஏற்படும். பொறுமையும் நிதானமும் தேவை. 26-ந் தேதிக்கு பிறகு போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். 11,12-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகளை காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரிகள்:சீரான முன்னேற்றம் கிடைக்க பெறுவர். உழைப்புக்கு தகுந்த லாபம் இடைக்கும்.15,16,19,20-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். 1,2,28,29,30-ந் தேதிகளில் நல்ல பணவரவை எதிர்பார்க்கலாம்.மனதில் மகிழ்ச்சி ஏற்படும். நற்சுகத்துடன் ஆனந்தமாக இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். 17-ந் தேதிக்கு பிறகு பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். பொதுநல சேவகர்கள் பிரதிபலனை எதிர்பராமல் உழைக்க வேண்டியதிருக்கும்.அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர். பதவி கிடைப்பது சந்தேகம்.26,27-ந் தேதிகளில்மன உழைச்சலுடன்காணப்படுவர்.
மாணவர்கள்:அதிக சிரத்தை கொண்டு முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் சொல் படி நடப்பது நல்லது.
விவசாயிகள்: கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். வருமானம் சீராக இருக்கும். 26-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.ஆடு,கோழி பசு மற்றும் கால்நடைகள் மூலம் நல்ல வருமானத்தை பெறுவர். வழக்கு விவகாரங்கள் சுமாராகத்தான் இருக்கும். சிலருக்கு பாதகமான முடிவு வரலாம்.
பெண்கள்: உங்கள் கை ஓங்கி நிற்கும்.கணவரின் அன்பு கிடைக்கும். உங்ளால் குடும்பம் சிறக்கும்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குடும்பத்திற்காக விட்டுக் கொடுத்து போவது நல்லது. 23-ந் தேதிக்கு பிறகு பெண் காவலர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும்.வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.1 21,22,23-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 3,4,5,31-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம்: சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.16-ந் தேதிக்கு பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும். 8,9,10-ந் தேதிகளில் வாயு தொடர்பான உபாதை வரலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 6,7-ந் தேதிகளில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும்.பணவிஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்: 4,6 யோகம் தரும் எண். வெள்ளை, கறுப்பு அதிர்ஷ்டமான நிறம். 1,2,3,4,5,11,12,13,14,17,18,21,22,23,28,29,30,31ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவகிரகங்களை சுற்றி வாருங்கள். வியாழக்கிழமை குருபகவானுக்கு முல்லை மாலை சூட்டி அர்ச்சனை செய்யலாம். தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். 23-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

                   விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே! இம்மாதம் சூரியன்17-ந் தேதி வரையும், செவ்வாய் 26-ந் தேதி வரையும், புதன் 7-ந் தேதிக்கு பிறகும், சுக்கிரன் 23-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள்.மேலும் குருவின் நன்மைகள் தொடரும். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். எடுத்த காரியம் வெற்றி அடையும். சூரியனால் 16-ந் தேதி வரை பணப்புழக்கம் இருக்கும் மதிப்பு மரியாதை சிறப்படையும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.அதன்பிறகு அவரால் வீண் செலவு ஏற்படும். சிக்கனம் தேவை.
குடும்பம்: உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்.. 19,20-ந் தேதிகளில் பெண்கள் மூலம் முன்னேற்றம் கண்பர். 15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்ளால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 26,27-ந் தேதிகளில் அவர்கள் வகையில் பிணக்குகள் வர வாய்ப்பு உண்டு எனவே சற்று ஒதுங்கி இருக்கவும். புதிய வீடு-மனை வாகனம் 26-ந் தேதிக்குள் வாங்கலாம். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
உத்தியோகம்: வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில் தடை ஏதும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசணையும் வந்து சேரும். கோரிக்கைகள் நிறைவேறும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். 13,14-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். 16-ந் தேதிக்கு பிறகு இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 26-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
வணிகம்: லாபம் குறையாது.அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினை7-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு கூட்டாளிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.17,18,21,22,23-ந் தேதிகளில் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும்.3,4,5,31-ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
கலைஞர்கள்: எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர் , போட்டிகள் முதலியன 23-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு புகழோடு வருமானத்தையும் பெறுவர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் வளர்ச்சி காண்பர்.
மாணவர்கள் முன்னேற்றத்துடன் காணப்படுவர்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் சிறப்பான மகசூலை பெறலாம். மஞ்சள், பாசி பயறு நெல், துவரை, கொண்டைக்கடலை காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர் சொத்து வாங்கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்:மகிழ்ச்சி, பூரிப்யுடன் காணப்படுவர். கணவரிடம் அன்பையும் ஆதரவையும் கிடைக்கப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். பெண் காவலர்களுக்கு சகஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். 24,25-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். விருந்து விழா என சென்று வருவீர்கள். 6,7-ந் தேதிகள் சிறப்பானதாக அமையும்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 23-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். 26-ந் தேதிக்குப் பிறகு உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டியது இருக்கும். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.11,12-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.வாயு தொடர்பான உபாதை வரலாம். 1,2,28,29,30-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். 18,9,10-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 1,9 யோகம் தரும் எண்கள். சிவப்பு, பச்சை ஆகியவை அதிர்ஷ்டம் தரும் நிறங்களாகும்.3,4,5,6,7,13,14,15,16,19,20,24,25,31 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வரவும்.சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள்.16-ந் தேதிக்குப் பிறகு சூரிய தரிசனம் வளத்தை தரும்.

                    தனுசு

தனுசு ராசி அன்பர்களே! இம்மாதம் குதூகலம் அதிகரிக்கும். சூரியன்17-ந் தேதியும் புதன்8-ந் தேதியும் மாறினாலும் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். சுக்கிரன் 23-ந் தேதி வரை நற்பலனை கொடுப்பார். மேலும் ராகு தொடர்ந்து பக்கபலமாக இருப்பதால் எண்ணிய காரியம் இனிதே நிறைவேறும்.முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். பணப்புழக்கம் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்து வந்த பொல்லாப்பு மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும். மதிப்பு மரியாதை கூடும். 16-ந் தேதிக்குப் பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். அரசின் உதவி கிட்டும்.
குடும்பம்:கணவன்-மனைவி இடையே அன்பு மேல் ஓங்கும். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். பெண்களின் ஆதரவு உண்டு. பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும். உங்கள் முனனேற்றத்திற்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக அவர்கள் மூலம் 21,22,23-ந் தேதிகளில் பல்வேறு நன்மைகளை பெறலாம்.விருந்து விழா என சென்று வருவீர்கள்.17,18-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.1,2,28,29,30-ந் தேதிகளில் உற்றார் உறவினர் வகையில் வீண் பிணக்குகள் வரவாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: சிறப்பான முன்னேற்றம் இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 15,16 ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.16-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.
வியாபாரம்: தடைகள் அனைத்தும் விலகும். இதனால் கூடுதல் வளர்ச்சியை காணலாம். எதிரிகளின் இடையூறு அடியோடு மறையும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். குறிப்பாக 6,7-ந் தேதிகளில் கூடுதல் லாபம் இடைக்கும். 16-ந் தேதிக்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.19,20,24,25-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். நெருப்பு தொடர்பான தொழிலில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 23-ந் தேதிக்குபிறகு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். .போட்டிகள்அதிகம் இருக்கும். அவப்பெயர் உருவாகலாம். பொதுநல சேவகர்கள் சிலருக்கு விருது கிடைக்கலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காணலாம். 3,4,5,31-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்
மாணவர்கள்: அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம். ஆசிரியர்களின் அறிவுரை கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல மகசூலை பெறுவர். பாசிபயறு நெல், உளுந்து, துவரை, சோளம், மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். இருக்கும். கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: உங்களால் குடும்பம் சிறப்படையும் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 8,9,10-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். அண்டை வீட்டார்உதவிகரமாக இருப்பர். 26,27-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம்: உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். 26-ந் தேதிக்கு பிறகு. வயிறு பிரச்சினை வரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.13,14-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.11,12-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.
அதிர்ஷ்டம்: 1,7,9 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். செந்தூரம், பச்சை அதிர்ஷ்ட நிறங்களாகும்.6,7,8,9,10,15,16,17,18,21,22,23,26,27. ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். சாப்பிடும் முன்பு காக்கைக்கு அன்னமிடுங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள்.செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்யலாம்.கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும்.

                      மகரம்

மகர ராசி அன்பர்களே! இந்த மாதம் பிற்பகுதியில் கூடுதல் பலன்கள் கிடைக்கம். சூரியன்16-ந் தேதிக்கு பிறகும்,செவ்வாய் 26-ந் தேதிக்கு பிறகும் நன்மை தருவார்கள். புதன் 8-ந் தேதி வரை நற்பலனை கொடுப்பார். மேலும் சுக்கிரன்,கேது தொடர்ந்து நன்மை தருவார்கள்.எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணப் -புழக்கத்தில் எந்த குறையும் இருக்காது.பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். நற்சுகம் கிடைக்கும். 26-ந் தேதிக்கு பிறகு பக்தி உயர்வு மேம்படும். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.
குடும்பம்: வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். தம்பதியினரிடையே அன்பு பெருகும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 24,25-ந் தேதிகளில் சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். .விருந்து விழா என சென்று வருவீர்கள். 19,20-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.3,4,5,31-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 16-ந் தேதி வரை வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி இருக்காது. அவப்பெயர் வரலாம்.26-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
உத்தியோகம்: வேலையில் இருப்பவர்கள் மேன்மை காண்பர். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு தானாக வந்து சேரும். சக பெண் ஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். 17,18-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.26-ந் தேதிக்கு பிறகு பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்
வியாபாரம்: வணிகம் வளர்முகமாக அமையும். 8,9,10- ந் தேதிகளில் எதிர்பாராத பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். 8-ந் தேதிக்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம்.16-ந் தேதிக்கு பிறகு வருவாய் அதிகரிக்கும். 26-ந் தேதிக்கு பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
கலைஞர்கள்:புதியஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த புகழ், பாராட்டு பெறுவர். அரசியல்வாதிகள் நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர். 26-ந் தேதிக்கு பிறகு முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள் முன்னேற்றம் காணலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். 8-ந் தேதிக்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.
விவசாயிகளின் வருமானத்திற்கு குறையிருக்காது. ஆடு,கோழி, பசு,கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெறலாம். 26-ந் தேதிக்கு பிறகு புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும்.
பெண்கள்: குதூகலமாக இருப்பர். கணவரின் அன்பு கிடைக்க பெறுவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 1,2,28,29,30-ந் தேதிகளில் புத்தாடை அணி கலன்கள் வாங்கலாம்.11,12-ந் தேதிகளில் சுகம் ஏற்படும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.26-ந் தேதிக்கு பிறகு பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.
உடல் நலம்: சிறப்படையும் பித்தம், மயக்கம், வயிறு பிரச்சினை போன்ற உபாதை களால் தவித்துவந்தவர்கள் அதிலிருந்து 26-ந் தேதிக்கு பிறகு குணம் அடைவர். பயணத்தின் போது கவனம் தேவை. 6,7-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.15,16-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.13,14-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: அதிர்ஷ்ட எண்கள் 6,7 ஆகியவை ஆகும். வெள்ளை, சிவப்பு 16-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்கள்ஆகும்.1,2,8,9,10,11,12,17,18,19,20, 24,25,28,29,30 ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு:சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். பெருமாள் கோவிலுக்கும் சென்று வாருங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்16-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.ஞாயிற்றுக் கிழமைகளில் ஏழைகளுக்கு கோதுமை தானம் கொடுக்கலாம்.

                    கும்பம்

கும்ப ராசி அன்பர்களே! இந்த மாதம் செவ்வாய் 26-ந் தேதி வரை சாதகபலன் கொடுப்பார். புதன் 8-ந் தேதி வக்கிரம் அடைந்து துலாம் ராசியில் இருந்த கன்னி ராசிக்கு மாறி நற்பலனை தருவார்.சுக்கிரன் 23-ந் தேதி சாதகமான இடத்துக்கு மாறுகிறார்.அதோடு குரு,சனி மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும். பணப்புழக்கத்துக்கு குறை இருக்காது. மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். மாத பிற்பகுதியில் வீண்விவாதத்தை குறைக்கவும்.
குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீடு-மனை வாகனம் வாங்கலாம். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். 8-ந் தேதி புதன் இடமாறுவதால் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். குடும்பத்தில் ஆனந்தம் அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையேஅன்பு,பாசம் மேலோங்கும். வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 13,14 ஆகிய தேதிகளில் அவர்கள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும்.அதேநேரம் 21,22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மையும் கிடைக்கும். 26-ந் தேதிக்கு பிறகு சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம்.நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகம்:போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 26-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு 8-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு குறையும். உங்கள் திறமை பளிச்சிடும்.அதற்குரிய வருமானமும் வரும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அரசு ஊழியர்கள்16-ந் தேதிக்கு பிறகு சிறந்த நிலைக்கு செல்வர். 19,20-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம்.உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: பணப் புழக்கம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 8-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும்.1,2,24,25,28,29,30-ந் தேதிகளில் சந்திரனால் இடையூறுகள் வரலாம். 11,12-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.26-ந் தேதிக்கு பிறகு பகைவர் வகையில் தொல்லை வரும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்- படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு.
கலைஞர்கள்: பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 23-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புகழ், பாராட்டு வரும். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். பணப்புழக்கம் இருக்கும். எதிர்பார்த்த பதவி 26-ந் தேதிக்குள் கிடைக்கும்
மாணவர்கள்: ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும். 8-ந் தேதிக்கு பிறகு திருப்திகரமான காலமாக இருக்கும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பாசி பயறு நெல், எள், துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள், தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும்.கால்நடை வகையில் வருமானம் கிடைக்கும்.கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனை பெறலாம். நிலங்கள் வாங்கலாம். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: பொன், பொருள் கிடைக்கும். குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். 8-ந் தேதிக்கு பிறகு ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரிகளால் நற்சுகம் கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய பதவி தேடி வரும். 23-ந் தேதிக்கு பிறகுபூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 3,4,5,31-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 26,27-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலன்: சுமாராக இருக்கும். 17-ந் தேதிக்கு பிறகு உடல் நலம் சிறப்படையும். மருத்துவ செலவு குறையும்.8,9,10-ந் தேதிகளில் வாயு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம்.17,18-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 15,16-ந் தேதிகளில் அனாவசியமாக எதிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். மௌனவிரதத்தை கடைபிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டம்:3,7அதிர்ஷ்ட எண்கள். மஞ்சள்,கறுப்பு நலம் தரும் நிறங்கள். 3,4,5,11,12,13, 14,19,20,21,22,23,26,27,31ஆகிய நாட்கள் சிறப்பானவையாக அமையும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். 26-ந் தேதிக்கு பிறகு செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு வாருங்கள்.

                      மீனம்

மீன ராசி அன்பர்களே! இந்த மாதம் புதன் 8-ந் தேதி வரையும் சூரியன் 16-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள்.மாதத் பிற்பகுதியில் நன்மைகள் சற்று குறையலாம். ஆனால் ராகுவின் நன்மைகள் தொடரும். எனவே கவலை வேண்டாம். சீராகவும் சிறப்பாகவும் இம்மாதம் செல்லும். பொருளாதார வகையில் தொடர்ந்து உயர்ந்த நிலையில் இருப்பர். 16-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் குறையும். அவப்பெயர் மறையும். காரிய அனகூலம் ஏற்பட எந்த தடையும் இல்லை.
குடும்பம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். ஆனால் 8-ந் தேதிக்கு பிறகு கணவன்-மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் வரலாம். ஒருவருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுத்து போகவும். 1,2,28,29,30-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். உறவினர்கள் வகையில் 8,9,10-ந் தேதிகளில் சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. அதேநேரம் 24,25-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நனமையும் கிடைக்கும். திருட்டு களவு பயம் 26-ந் தேதிக்கு பிறகு நீங்கும்.
உத்தியோகம்: வேலையில் திருப்தி இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும்.8-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரியலாம். அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும். 21,22,23-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரம்: நல்ல லாபம் கிடைக்க பெறலாம். ராகு காரியஅனுகூலத்தையும், பொருளாதார வளத்தையும்,தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார். பகைவர்களின் இடையூறுகள் அவ்வப்போது தலைதூக்கலாம். அவர்கள் வகையில் ஒரு கண் இருப்பது நல்லது. 16-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் பிரச்சினை வரலாம். கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். 13,14ஆகிய தேதிகளில் திடீர் பண வரவு ஏற்படும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.3,4,5,26,27,31-ந் தேதிகளில் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள்: முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 23-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பொதுநல சேவகர்கள் சிறப்படைவர். அரசியல்வாதிகள் எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. முக்கிய முடிவு எடுப்பதை தள்ளி போடுங்கள்.
மாணவர்கள்: கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி பெறுவர். 8-ந் தேதிக்கு பிறகு சற்று தொய்வு ஏற்படலாம்.
விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறுவகைகள், நெல்,உளுந்து போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்: திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடி வரும். கணவரின் அன்பு கிடைக்க பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தோழிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.8-ந் தேதிக்கு பிறகு கணவரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும்.வேலைப்பளு இருக்கும். வேலையில் கவனம் தேவை. 15,16 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.
உடல்நலம்: சுமாராக இருக்கும். சூரியனால் ஏற்பட்ட சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள்16-ந் தேதிக்கு பிறகு இருக்காது.11,12-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.19,20-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.17,18-ந் தேதிகளில் வீண்விதங்களில் ஈடுபடாம் ஒதுங்கி இருக்கவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்:4, 8 யோகமான எண்கள். நீலம், செந்தூரம் அதிர்ஷ்டம் தரும் நிறங்கள். 1,2,6,7,13,14,15,16,21,22,23,24,25,28,29,30.ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு:சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரங்களை வலம் வாருங்கள். முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்தால் பிரச்சினைகள் அகன்று மகிழ்ச்சி அதிகரிக்கும். தினமும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள். வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம். மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றிவழிபடுங்கள். மேலும் பார்வையற்றவர்கள் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.