April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு; புறநகர் ரெயில்கள் தொடர்ந்து ஓடாது

1 min read

Curfew in Tamil Nadu extended for another month; Suburban trains do not run regularly

29/9/2020
தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மின்சார ரெயில்கள் மற்றும் புறநகர் ரெயில்கள் ஓட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

ஊரடங்கு

பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ( செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், பொது ஊரடங்கு, இம்மாதம், 30-ந் தேதி வரை அமலில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கருதி, பல்வேறு தளர்வுகளை, தமிழக அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், நீச்சல் குளம் போன்றவற்றை திறக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில், ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணத்தில், 50 பேர்; இறுதி சடங்கில், 25 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பது உட்பட, சில கட்டுப்பாடுகளும் உள்ளன.

இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை, 10:00 மணிக்கு, தலைமை செயலகத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். மாலை 3 மணிக்கு, மருத்துவ நிபுணர்களுடன், ஆலோசனை நடந்தது. இதையடுத்து இன்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

நீடிப்பு

  • தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்டோபர் 31-ம் தேதி வரை ஊரடங்கை நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
  • சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 100 உள் நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி.
  • பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீட்டிப்பு.
  • அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.

புறநகர் ரெயில்கள்

*புறநகர், மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு.

  • வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கும் தடை .
  • மதம், அரசியல் கட்டடம், பொழுது போக்கு கட்டடங்களுக்கும் தடை நீட்டிப்பு.
  • டீக்கடை, உணவகங்கள், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி.
    *கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து தடை நீடிக்கப்படும்.
    *ஊரக மற்றும் நகர்பகுதிகளில்உள்ள வாரச்சந்தைகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதி

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.