இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மரணம்
1 min readRamagopalan passes away
30/9/2020
இந்து முன்னணி அமைப்பின் நிறுவன தலைவர் ராமகோபாலன் மரணம் அடைந்தார்.
ராமகோபாலன்
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனரும் தலைவர் ராமகோபாலன். சென்னையில் வசித்து வந்த இவருக்கு கடந்த ஆகஸ்டு மாதம் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அதன்பிறகு வீட்டுக்கு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அவர் சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார்.
மரணம்
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) ராமகோபாலன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94.
ராமகோபாலனின் சொந்த ஊர் சீர்காழி. இவர் 1940கள் முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வந்தார். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
1980-ம் அண்டு இந்து முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கினார்.
மீனாட்சிபுரம் மதமாற்றம் நிகழ்வுக்குப் பிறகு, இந்த அமைப்பு பிரபலமானது. தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடக்கும் விநாயகர் ஊர்வலங்களை இந்து முன்னணி ஒருங்கிணைத்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்புவரையும்கூட, இந்த விநாயகர் ஊர்வலங்களில் ராமகோபாலன் பங்கேற்று வந்தார்.
ராமகோபாலன் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளார்.