May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா பரவலை தடுக்க கேரளாவில் 3 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு

1 min read

144 ban orders in 3 districts in Kerala to curb the spread of corona

3/10/2020

கேராளாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 3 மாவட்டங்களில் ஒரு மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேராளாவில் கொரோனா

கொரோனா பரவியபோத கேரளாவைச் சே்ாந்த ஒரு பெண்ணுக்கு முதன்முதலில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவரை டாக்டர்கள் தீவிர முயற்சி எடுத்து காப்பாற்றினார்கள். அதன்பின் கேரளாவில் கொரோனா தொற்று அதிகம் பரவாமல் இருந்தது.

ஆனால் இப்போது அங்கு கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் கேரள மாநிலம் முழுவதும் புதிதாக 9,258 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் புதிதாக 22 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 742 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 77,482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கேராளவில் திருவனந்தபுரம், ஏரணாகுளம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில்தான் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று( வெள்ளிக்கிழமை) தலா 1000க்கும் மேலாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தடை உத்தரவு

இதையடுத்து அந்த மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூடக் கூடாது என கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் பஸ் மற்றும் பொது போக்குவரத்து, கடைகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் மாணவர்களுக்கான தேர்வுகள் நடக்கும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இறுதிச் சடங்குகளில் 20 பேரும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும் கலந்து கொள்ளலாம் என்றும் மதம், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் 20 பேர் வரை பங்கேற்கலாம், ஓட்டல்கள், கடைகள் போன்றவற்றில் 5 பேருக்கு மேல் இருக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில அரசு எச்சரித்து உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.