May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

பெண் பாலியல் பலாத்காரத்தில் சாவு; போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு

1 min read

Death in female rape; Police officers suspended

3/10/2020

உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்காரத்தில் இளம் பெண் இந்தார். அவரது உடல் பெற்றோருக்கு தெரியாமல் போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண் செய்யப்பட்டனர்.

பெண் பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த சில தினங்களுக்கு முன்பு 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண்ணை நாக்கை அறுத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.
படுகாயத்துடன் அந்த பெண், டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இரவோடு இரவாக அந்த பெண்ணின் உடலை, ஹத்ராசுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு, தகனம் செய்துவிட்டனர். உடலை வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்று, போலீசார் தகனம் செய்ததாக அப்பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுபற்றிய தகவல் அறிந்த உத்தரபிரசேதம் முதல்-மந்திரி ஆத்யநாத், பெண்ணின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதுடன், இளம் பெண் பலாத்கார கொலை சம்பவம் பற்றி விசாரிக்க, மூன்று பேர் அடங்கிய விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்தக் குழு விசாரணை நடத்தி, ஒரு வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்

போராட்டம்

அந்தப் பெண்ணின் உடல் இரவோடு இரவாக போலீஸ் பாதுகாப்புடன் தகனம் செய்யப்பட்டது. குடும்பத்தினர் அனுமதியின்றி, அவர்கள் யாரும் பங்கேற்காத நிலையில் போலீசார் அவசரமாக உடலை தகனம் செய்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஹத்ராஸ் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது.

இதனால் அந்த மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அந்தப் பெண்களின் ஊருக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

ராகுல்காந்தி

இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ஹத்ராஸ் நோக்கி வரும் அரசியல் தலைவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புகின்றனர். ராகுல் காந்தி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. யான டெரிக் ஓ பிரையன் ஆகியோரை போலீசார் தடுத்து நிறத்தினர். இதில் ராகுல் காந்தி கீழே விழுந்தார். போலீசார் அவரை வலுக்கட்டாயமாக பிடித்து கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது.

ராகுல்காந்தி தடுத்து கீழே தள்ளப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை கண்டித்து நாடுமுழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மீண்டும் ஹத்ராஸ் செல்லப்போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சிவசேனா கண்டனம்

ராகுல்காந்தி கீழே தள்ளப்பட்டதற்க சிவசேனா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மும்பையில் நடிகை கங்கனா ரணாவத் வீடு இடிக்கப்பட்டபோது குரல் கொடுத்தவர்கள், ராகுல் தாக்கப்பட்டது குறித்து பேசாமல் மவுனம் காப்பது ஏன் என்று சிவசேனா எம்பி.யான சஞ்சய் ராவத் கேள்வியெழுப்பினார்.
அவர் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தடை உத்தரவை மீறிச்சென்றதால் ராகுலைக் கைது செய்திருக்கலாமே தவிர, அவரது சட்டையின் காலரைப்பிடித்து இழுத்து, தரையில் தள்ளிவிட்டிருக்கக்கூடாது. ராகுல் மீதான போலீஸ் தாக்குதல், ஜனநாயகம் மீதான கூட்டுப் பலாத்காரம். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நடிகையின் வீடு மும்பை மாநகராட்சியால் இடிக்கப்பட்டபோது வானமே இடிந்து விழுந்ததுபோர் மராட்டிய மாநில அரசை குற்றம் சாட்டியவர்கள், இப்போது ராகுல் தாக்கப்பட்ட சம்பவத்துக்குக் குரல் கொடுக்காமல் மவுனம் காப்பது ஏன்?.
இவ்வாறு அவர் கூறினார்.

சஸ்பெண்டு

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதை அரசு உறுதி செய்யும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார். மேலும் முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் மற்றும் சில அதிகாரிகளை சஸ்பெண்டு செய்யவும் முதல்-மந்திரி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.