May 24, 2024

Seithi Saral

Tamil News Channel

சீனாவில் ‘டிக்டாக்’ கில் பிரபலமான பெண் எரித்துக் கொலை

1 min read

Famous woman burnt to death in Tiktok, China

3/10/2020

சீனாவில் டிக்டாக்கில் பிரபலமான பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.

டிக் டாக் பிரபலம்

சீனாவில் டோயின் என்ற டிக்டாக் செயலியில் பிரபலமானவர் பெயர் லாமு (வயது30). சிச்சுவான் மாகாணத்தின் கிராமிய வாழ்க்கை தொடர்பான வீடியோக்களை அவர் வெளியிட்டுவந்தார். மேக்கப் இல்லாமல் இயல்பாக தோன்றும் லாமுவுக்கு ரசிகர்கள் அதிகம்.
சமூகவலைதளத்தில் அவரை 7,82,000 பேர் பின்தொடர்கிறார்கள். 6.3 மில்லியன் லைக்ஸ் கொடுத்துள்ளனர்.


எரித்துக் கொலை

இந்த நிலையில், லாமுவை உயிருடன் அவரது முன்னாள் கணவர் எரித்துக்கொன்ற சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூகவலைதளத்தில் வெளியிடுவதற்காக வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது அவரது குடும்பத்தினரின் கண் எதிரே, முன்னாள் கணவரால் அந்த கொடூர சம்பவம் நிகழ்த்தப்பட்டது.

அந்தப் பெண் உயிரிழப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன், 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 14-ந் தேதியன்று நடந்தது. அப்போது லாமுவைத் தாக்கும் நோக்கத்துடன் பெட்ரோலுடன் முன்னாள் கணவர் டேங்க் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து பல நாள்கள் குடும்ப வன்முறையில் ஈடுபட்டுவந்த கணவனுக்கு எதிராக லாமு, விவாகரத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.
இருவரிடம் தலா ஒரு குழந்தை வளர்ந்துவந்துள்ளனர். பின்னர், தன்னுடன் சேர்ந்து வாழாவிட்டால் குழந்தையைக் கொன்றுவிடுவதாக முன்னாள் கணவர் மிரட்டியுள்ளார்.

இதனை அடுத்துதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஸ்டாராக விளங்கிய லாமுவின் மரணத்தின் மூலம் சீனா முழுவதும் பெண்கள் மீதான குடும்ப வன்முறைக்கு எதிரான விவாதங்கள் சமூகவலைதளங்களில் எழுந்துள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.