May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

டிரம்ப் நிலை மோசமாக இருந்தது; வெள்ளை மாளிகை தகவல்

1 min read

The fact that Trump’s position was bad; White House information

4/10/2020

டிரம்ப் ஆபத்தான நிலையில் இருந்தது உண்மைதான் என்று வெள்ளை மாளிகை அதிகாரி கூறினார்.

அமெரிக்க அதிபர்

அமெரிக்கா அதிபர் டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 74 வயதாகும் அவருக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில்தான் அவருக்கும், அவரது மனைவி மெலானியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் டிரம்புக்கு லேசான காய்ச்சல் இருந்தது. மேலும் ஆக்சிஜன் அளவும் குறைந்தது.

இதனால் அவர் கடந்த வெள்ளிக்கிழமை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலைபற்றி வலைதளத்தில் பல்வேறு தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரி மார்க் மேடோஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கவலைப்பட்டோம்

வெள்ளிக்கிழமை ஊடகங்களில் வெளியான தகவலை விடவும் டிரம்ப் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரது ரத்த ஆக்சிஜன் அளவு வேகமாக வீழ்ச்சியடைந்தது. அதனால் உடனடியாக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆனால் இப்போது அவருக்கு காய்ச்சல் இல்லை.

இதனை மிகப்பெரிய விஷயமாக கருதுகிறோம். ஆக்சிஜன் செறிவு அளவு சிறப்பாக உள்ளது. நேற்று(சனிக்கிழமை) காலை நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம். ஆனாலும் டிரம்ப் வழக்கமான பாணியில்நடந்து கொண்டிருந்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரெம்டெசிவிர் மருந்து

தற்போது டிரம்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. டிரம்ப் சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்பு அளிப்பதாகவும், எனினும் அடுத்த 48 மணி நேரம் மிகவும் முக்கியமானது எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரம்புக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி வெள்ளை மாளிகை டாக்டர் சீன பி.கோன்லே கூறுகையில், “டிரம்ப் நலமுடன் இருக்கிறார். அவருக்கு துணை ஆக்சிஜன் எதுவும் தேவைப்படவில்லை. கொரோனாவைரசை கட்டுப்படுத்த ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவரதுஇதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்”என்றார்.

ரெம்டெசிவிர் மருந்து கொரோனாவில் இருந்துவிரைவில் குணமடைய உதவும் மருந்து. பல்வேறு நாடுகளில் இந்த மருந்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இந்த மருந்தை பரவலாக பயன்படுத்துவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கடந்த மே 1ம் தேதி அனுமதிஅளித்தது குறிப்பிடத்தக்கது.

அரசு பணிகள்

டிரம்ப் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் அமெரிக்க மாகாணச் செயலாளர் மைக் பாம்பியோ தற்போது அனைத்து அரசுப் பணிகளையும் கவனித்து வருகிறார். இதன் காரணமாக பாம்பியோ தற்போது தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை குறைத்துக் கொண்டார். இந்த வாரம் அவர் மங்கோலியா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய ஆசிய நாடுகளுக்கு சென்று அங்கு உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தார். ஆனால் இப்போது அவர் ஜப்பானுக்கு மட்டும் செல்ல உள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.