June 18, 2026

Seithi Saral

Tamil News Channel

பயிற்சி விமானம் கீழே விழுந்து 2 வீரர்கள் மரணம்

1 min read

plane crashes, killing 2 soldiers

4/10/2020

திருவனந்தபுரம் கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் நொறுங்கியதில் 2 வீரர்கள் மரணம் அடைந்தனர்.

பயிற்சி

திருவனந்தபுரம் அருகே கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம், ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இருந்து கப்பற்படையினர் பயிற்சி மேற்கொள்வார்கள். அதன்படி ஐ.என்.எஸ். கருடா கப்பலில் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்படி பயிற்சியில் ஈடுபட்டபோது காலை 7 மணியளவில், கடற்படை தளம் பக்கத்தில் தொப்பும்பாடி பாலம் அருகே நொறுங்கி விழுந்தது.

2 பேர் சாவு

இதில், பயிற்சி விமானத்தில் இருந்த லெப்டினன்ட் ராஜிவ் ஜா மற்றும் சுனில் குமார் ஆகியோர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் போகும் வழியிலேயே இறந்து போனார்கள்.
விபத்து குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *