May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

பிரியங்காவின் குர்தாவை இழுத்த விவகாரம்; காவல் துறை மன்னிப்பு கோரியது

1 min read

The affair of Priyanka pulling off her kurta; The police department apologized

5/-10/ -2020

பிரியங்காவின் குர்தாவை போலீஸ் காரர் ஒருவர் இழுத்த விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது.

பிரியங்கா

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். வன்கொடுமையில் பலத்த காயம் அடைந்த அந்தப் பெண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். அவரது குடும்பத்தாருக்குகூட தெரியாமல் அந்த பெண்ணினி உடல் போலீஸ் பாதுகாப்புடன் எரிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் காரணமாக போலீஸ் சூப்பிரண்டு உள்பட சில அதிகாரிகள் போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் இறந்த பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றனர்.

குர்தாவை இழுத்த போலீஸ்காரர்

நொய்டா பகுதியில் அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸ்காரர் ஒருவர் பிரியங்காவின் குர்தாவை பிடித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

மன்னிப்பு

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது. இது குறித்து நொய்டா காவல்துறையின் டுவீட்டரில், “மிகப் பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போது நடந்த இந்த சம்பவத்திற்கு நொய்டா காவல்துறை வருந்துகிறது. பிரியங்காவிடமும் மன்னிப்பு கேட்கிறோம். இந்த விவகாரம் தலைமையகத்தின் துணை போலீஸ் கமிஷனரால் அறியப்பட்டு, ஒரு மூத்த போலீஸ் அதிகாரி இதுபற்றி விசாரித்து வருகிறார். விசாரணைக்குப் பிறகு தண்டனை நடவடிக்கை உறுதி செய்யப்படும். பெண்களின் முழு மரியாதைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என அதில் குறிப்படப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.