May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு

1 min read

Age limit for joining the teaching profession in Tamil Nadu

10/10/2020

தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் ஆசிரியராக பணியில் சேர வயது வரம்பு கொண்டுவரப்பட்டு உள்ளது.

ஆசிரியர் பணி

தமிழகத்தில் ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு இல்லாமல் இருந்தது. ஓய்வு வயதான 58 வயது நிரம்பாத அனைவரும், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
இப்போது ஆசிரியர் பணியில் சேர வயது வரம்பு கொண்டு வரப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், வட்டார கல்வி அதிகாரி, தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் பணி நியமனத்துக்கான வயது வரம்பு 40 வயது என, முடிவு செய்யப்பட்டது. இந்த அரசாணையின் நகல், தற்போது அனைத்து கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அரசாணையை பின்பற்றி மட்டுமே, இனி பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என, கூறப்பட்டுள்ளது.

காரணம் என்ன?

ஆசிரியல் பணியில் சேர வயது வரம்பு வைத்ததற்கான காரணத்தை அதிகாரி ஒருவர் கூறினார். தற்போது 58 வயது வரை உள்ளவர்களுக்கு பணி வழங்குவதால், அவர்களிடம் இருந்து போதிய அளவில் பணியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.

சிலர் ஒரு மாதம், இரண்டு மாதம் மட்டும் அரசு பணியில் இருந்து விட்டு, பல வருடங்கள் பென்ஷன் பெறும் நிலை ஏற்பட்டது. அதனால், அரசுக்கும் தேவையற்ற செலவு ஏற்பட்டது. இதை தவிர்க்கவே, 40 வயதுக்கு மேல் நியமனம் இல்லை என்று முடிவு செய்யப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

எனவே, வருங்காலங்களில், வட்டார கல்வி அதிகாரி, தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர் போன்ற பதவிகளுக்கு, 40 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட உள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.