June 19, 2026

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 73,272 பேருக்கு கொரோனா; 82,753 பேர் டிஸ்சார்ஜ்

1 min read

Corona for 73,272 people in one day in India; 82,753 discharged

10/10/2020
இந்தியாவல் நேற்று ஒரே நாளில் 73,272 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதே நேரம் 82,753 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை தினமும் காலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று( சனிக்கிழமை) வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 73,272 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் இந்தியாவில் இதுவரை மொத்தம் 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

டிஸ்சார்ஜ்

நேற்று மட்டும் 82,753 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்ட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 59 லட்சத்து 88 ஆயிரத்து 823 கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று மட்டும் 926 பேருக்கு கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதுவரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 416 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
தற்போது 8 லட்சத்து83 ஆயிரத்து 185 கொரோவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பரிசோதனைகள்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 11 லட்சத்து 64 ஆயிரத்து 18 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து 8 கோடியே 57 லட்சத்து 98ஆயிரத்து 698 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *