குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
1 min read
Flooding in Courtallam Falls
14-/10/2020
தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அணைகள் நிரம்புகின்றன.
அருவிகளில் வெள்ளம்
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. அதே நேரம் மலையின் உட்பகுதியில் கன மழை கொட்டுகிறது.
குற்றாலம் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி, சிற்றருவி, செண்பகாதேவி, அருவி தேனருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரமணாக குற்றாலத்திற்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது சீசன் நன்றாக இருந்தாலும் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
அணைகள்
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி அணை, ராமநதி அணை, கருப்பாநதி அணை, குண்டாறு அணை, அடவிநயினார் அணை அனைத்து அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இவற்றில் குண்டாறு அணை, அடவிநயினார் அணை ஆகியவை நிரம்பி விட்டன .இதனால் தென்காசி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தங்கள் பணிகளை தொடங்கி உள்ளனர்.
அதேபோல் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.