தமிழகம் கூடுதலாக ரூ.9,267 கோடி கடன் வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி
1 min read
Central government allows Tamil Nadu to borrow an additional Rs 9,267 crore
14/10/2020
தமிழக அரசு கூடுதலாக ரூ.9,267 கோடி கடன் வாங்கி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜி.எஸ்.டி.
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஜி.எஸ்.டி. வசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால் அந்த தொகையை வழங்கும்படி மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக அரசும் தங்கள் மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரத்து 321 கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
கடன்
மாநிலங்களுக்கான இழப்பீடுகளை அளிப்பது தொடர்பாக, சமீபத்தில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, இந்த இழப்பீட்டுத் தொகையை, மாநிலங்கள் கடனாக பெறும் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை தமிழகம் உள்ளிட்ட 20 மாநிலங்கள் ஏற்று கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழக அரசு கூடுதலாக ரூ.9,627 கோடி கடன் வாங்கி கொள்ள மத்திய நிதிஅமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.