கொல்கத்தா அணி கேப்பன் பதவியில் இருந்து தினேஷ் கார்த்தக் விலகல்
1 min read
Dinesh Karthik resigns as Kolkata captain
16/10/2020
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடும் கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகினார்.
தினேஷ் கார்த்திக்
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. இதில் விளையாடும் கொல்கத்தா அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருந்து வருகிறார். இவரது தலைமையில் கொல்கத்தா அணி விளையாடிய 6 போட்டிகளில் 4ல் வெற்றி 2 ல் தோல்வியை சந்தித்து 8 புள்ளிகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) அந்த அணி, மும்பை அணியை எதிர்கொள்ள இருக்கிறது.
விலகல்
இந்த நிலையில், கொல்கத்தா அணி கேப்டன் பதவியிலிருந்து தினேஷ் கார்த்திக் விலகியுள்ளார். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்த விரும்புவதாகவும், அதனால் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அடுத்த கேப்டனாக இங்கிலாந்தின் இயான் மோர்கனை நியமிக்கும்படி கோரியுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இங்கிலாந்து அணி கேப்டனாக இயான் மோர்கன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.