75 ரூபாய் நாயணம்- மோடி வெளியிட்டார்
1 min read
Modi issued a 75 rupee coin
16-/10/2020
75 ரூபாய் நாயணத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
75 ரூபாய் நாணயம்
இந்தியாவில் இதுவரை 75 ரூபாய் தனி நோட்டாக அச்சிடப்பட்டது இல்லை. அதேபோல் 75 ரூபாய் நாணயமும் இல்லை.
இப்போது முதன்முறையாக 75 ரூபாய் நாணயம் அச்சிடப்பட்டு உள்ளது.
உணவு மற்றும் விவசாய அமைப்பு உருவாக்கப்பட்டதன் 75ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் அச்சிடப்ப்பட்டது. இதை பிரதமர் மோடி வெளியிட்டார்.
மேலும், சமீபத்தில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய 8 பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அதன்பின்னர் மோடி பேசுகையில் கூறியதாவது:-
உலக உணவு அமைப்பிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது மிகப்பெரிய சாதனை ஆகும். அந்த அமைப்பிற்கு இந்தியாவின் பங்களிப்புக்காக நாடு மகிழ்ச்சி அடைகிறது. அந்த அமைப்புடன் உறவு வரலாற்று ரீதியிலானது.
திருமண வயது
பெண்களுக்கு சரியான திருமண வயது குறித்து விவாதம் நடந்து வருகிறது. இது குறித்து அமைக்கப்பட்ட குழு ஏன் இன்னும் அறிக்கை அளிக்கவில்லை என நாடு முழுவதும் பல பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த குழு விரைவில் அறிக்கை அளிக்கும். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.