கொரோனா பரவல் பற்றி பிரதமர் ஆலோசனை
1 min readrime Minister’s advice on corona spread
17/10/2020
இந்தியாவில் கொரோனா பரவல் பற்றி பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரதமர் ஆலோசனை
இந்தியாவில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு மருந்து விநியோகம் குறித்து பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில், மத்திய சுகாதார அமைச்சர், பிரதமரின் முதன்மை செயலர், நிடி ஆயோக்கின் சுகாதார பிரிவு உறுப்பினர் மற்றும் பல அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தடுப்பு மருந்து விநியோக முறைக்கு உதவும் வகையில் மருந்துகள், தடுப்பூசி ஆகியவை நமது அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் கிடைக்கும் வகையில் நமது முயற்சிகள் இருக்க வேண்டும். இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரில் சர்வதேச சமூகத்திற்கு நாம் உதவ முடியும். நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பன்முகத்தன்மையை கருத்தில் கொண்டு, தடுப்பு மருந்து விரைவில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுளளது.