தமிழகத்தில் இன்று மட்டும் 4,295 பேருக்கு கொரோனா; 5,005 பேர் டிஜ்சார்ஜ்
1 min readCorona for 4,295 people in Tamil Nadu today alone; 5,005 people discharged
17/10/2020
தமிழகத்தில் இன்று மட்டும் 4,295 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளனர். அதேநேரம் 5,005 பேர் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டனர்
தமிழக கொரோனா பரவல் பற்றி தினமும் மாலையில் தமிழக சுகாதரத்துறை தகவலை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
4,295 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று 4,295 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து,83 ஆயிரத்து 486 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டுமு் 192 ஆய்வகங்களில் 90,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவைகளுடன் சேர்த்து இதுவரை 88 லட்சத்து 56 ஆயிரத்து 280 மாதிரிகள் பரிசோதனையிடப்பட்டன.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 2,594 பேர் ஆண்கள். 1,701 பேர் பெண்கள். கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 4 லட்சத்து12 ஆயிரத்து 802. பெண்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 70 ஆயிரத்து 652 . மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 32.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று( சனிக்கிழமை) மட்டும் 5,005 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 32 ஆயிரத்து 708 ஆக உள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவுக்கு 57 பேர் இறந்துள்ளனர். இதில் 30 அரசு ஆஸ்பத்திரிகளிலும் 27 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டவர்கள்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,586 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 40,192 பேர் கொரோன சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில்…
சென்னையில் மட்டும் இன்று 1,140 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இதுவரை 1 லட்சத்து 88 ஆயிரத்து 944 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கோவையில் இன்று 389 பேருக்கும், சேலத்தில் 240 பேருக்கும், செங்கல்பட்டில் 231 பேருக்கும், திருவள்ளூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 159 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 148 பேருக்கும், நாமக்கலில் 131 பேருக்கும், ஈரோடில் 122 பேருக்கும், கடலூரில் 113 பேருக்கும், தஞ்சாவூரில் 101 பேருக்கும், வேலூரில் 91 பேருக்கும், நீலகிரியில் 88 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
நெல்லை
நெல்லை மாவட்டத்தில் 47 பேருக்கும், தென்காசி மாவட்டத்தில் 12 பேருக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 48 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
இன்று சென்னையில் 15 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், வேலூரில் 4 பேரும், தர்மபுரி, சேலத்தில் தலா 3 பேரும், ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, நாமக்கல், திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 2 பேரும், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி, திருவாரூரில் தலா ஒருவரும் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
சென்னையில் இன்று1,458 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்ட்டுள்ளனர். சென்னையில் இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 1,72,533 ஆக உயர்ந்துள்ளது.