சென்னை நகைக்கடையில் 2 கோடி நகைகள் கொள்ளை
1 min read2 crore jewelery looted from Chennai jewelery shop
21/10/2020
சென்னை தியாகராய நகரில் உள்ள மூசாதெருவில் மொத்த வியாபாரம் நடைபெறும் நகைக்கடையின் பூட்டை உடைத்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
கடையில் இருந்து 4 கிலோ தங்கம், 15 தங்க கட்டிகள், வெள்ளி கட்டிகள், வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கொள்ளை பற்றி நகைக்கடை உரிமையாளர் பாம்பலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.