நடிகர் விஜய்யின் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும்; சந்திரசேகர் கூறுகிறார்
1 min readActor Vijay’s movement will become a political party; Chandrasekhar says
22/10/2020
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகிறார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது மாஸ்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படம் வெளியிட தயார் நிலையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அந்தப் படத்தை தற்போது வெளியிட முடியாமல் உள்ளது.
இப்படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
எஸ்.ஏ.சந்திரசேகர்
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். விஜய் மக்கள் இயக்கம் குறித்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:-
நான் பாரதீய ஜனதாவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை. எனக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது.
”விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் அழைக்கும் போது நாங்கள் அரசியலுக்கு வருவோம்.
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.