இந்திய எல்லைக்குள் வந்த சீன வீரர் ஒப்படைப்பு
1 min read
The surrender of a Chinese soldier who came within Indian borders
22/10/2020
இந்திய எல்லைக்குள் புகுந்த சீன வீரர் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.
ஆகிரமிக்க முயற்சி
சீன ராணுவத்தினர் அடிக்கடி இந்திய எல்லைக்குள் புகுந்து ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
கடந்த மே மாதம் காஷ்மீரின் கிழக்கு லடாக் பகுதியில் சீனராணுவம் புகுந்து கூடாரங்களை அமைத்தது. இதனை நமது ராணுவப்படையினர் முறியடித்தனர். இதனை அடுத்து ஜூன் மாதம் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் பலர் உயிரிழந்தனர்.
இதனால் நிலவிய போர் பதற்றத்தைக் குறைக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் அடிக்கடி சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.
சீன வீரர்
இந்நிலையில், கடந்த 18-ம்தேதி சீன ராணுவ வீரர் அசல்எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைதாண்டி இந்தியப் பகுதிக்குள்அத்துமீறி நுழைந்தார். அவரை நமது படையினர் சிறைபிடித்தனர்.
அந்த வீரரைவிடுவிக்குமாறு சீன ராணுவம் கேட்டுக்கொண்டது.
விடுவிப்பு
இதைத் தொடர்ந்து, சிறைபிடித்த ராணுவ வீரரை, டெம்சாக்பகுதியில் சீன ராணுவத்திடம் இந்திய ராணுவ அதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர். இதை சீன ராணுவமும் உறுதி செய்துள்ளது.
இருநாட்டு ராணுவஉயர் அதிகாரிகள் இந்த வாரஇறுதியில் மீண்டும் சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவும், நல்லெண்ண அடிப்படையிலும் சீன வீரர் விடுவிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.