தமிழகத்தில் இன்று 2,869 பேருக்கு கொரோனா
1 min readCorona for 2,869 people in Tamil Nadu today
25/10/2020
தமிழகத்தில் இன்று புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தினமும் மாலையில் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 7 லட்சத்து 9 ஆயிரத்து 5 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று மட்டும் 4,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் இதுவரை வரை 6 லட்சத்து 67 ஆயிரத்து 475 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தற்போது 30,606 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 31 பேர் இறந்துள்ளனர். இதில் அரசு மருத்துவமனையில் 17 பேரும், தனியார் மருத்துவமனையில் 14 பேரும் அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். இதுவரை மொத்தம் 10,934 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
பரிசோதனை
இன்று 80690 மாதிரிகளும், 79350 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 9517507 மாதிரிகளும், 9257449 பேருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறைந்து வருகிறது
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. சுமார் 4 மாதத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 2-வது நாளாக 3 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
சென்னையில்..
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழ்நிலையில், இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களைசென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இதுவரை 1,94,901 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரில் 3,583 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரில் 1,81,171 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 10,147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.