ஆதார் அட்டையில் தமிழ் வாசகம் இந்திக்கு மாற்றம்; கனிமொழி குற்றச்சாட்டு
1 min readTamil text on Aadhar card changed to Hindi; Kanimozhi charge
25/10/2020
புதிய ஆதார் அட்டைகள் பெறுவோருக்கு “எனது ஆதார், எனது அடையாளம்” என்ற தமிழ் வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழியில் எதை வேண்டுமானாலும், ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையை புதுப்பிப்போர் மற்றும் புதிய அட்டைகள் பெறுவோருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில், “எனது ஆதார், எனது அடையாளம்” என்ற வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.