கணவன்-மனைவி பிரச்சினையை தீர்க்கும் வழிபாடு
1 min read
Prayer for solve family problem
சில குடும்பங்களில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை வந்து கொண்டே இருக்கும். சில இடங்களில் பிரச்சினை முற்றி தம்பதியர் பிரிந்தே வாழ்வார்கள். அவர்கள் மதன துவாதசி விரதத்தை 30 நாட்கள் மேற்கொள்ள வேண்டும். அந்த விரதத்தை புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் துவாதசி திதியில் தொடங்க வேண்டும். இந்த ஆண்டு 28-10-2020 புதன் கிழமை அன்று தொடங்க வேண்டும். 30 நாட்களும் காலையில் லட்சுமி நாராயணர் மற்றும் துளசி தேவியை வழிபட வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். வீட்டில் சண்டை நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர்.
மேலும் 28-ந் தேதி வரும் துவாதசிக்கு பத்பநாப கோதுவாதசி என்றும் பெயர். அன்றைய தினம் பசுவையும் பத்பநாபரையும் வழிபட்டால் நம் குழந்தைகள் முன்னேற்றம் காண்பர்.