குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தொழில் தொடங்க நாளை சிறந்த நாள்
1 min readscTomorrow is the best day to hang out with the profession, to enroll children in school
25/10/2020
வழக்கமாக பள்ளிக்கூடங்கள் ஜூன் மாதம் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக இன்னும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை. பல பள்ளிகளில் ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
உயர்நிலைப்பள்ளிகள் இந்த மாதம் திறக்கப்படுகிறது. அதுவும் பல்வேறு மாணர்கள் நலம் பேணும் விதமாக கட்டுப்பாடுகளுடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இன்னும் தொடக்கப்பள்ளிக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. அரசு பள்ளிகள் பலவற்றில் இன்னும் மாணவர் சேர்க்கை நிறைவு பெறவில்லை.
சிலர் தங்கள் குழந்தைகளை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்க ஆசைப்படுவார்கள். அன்றுதான் கல்வி கற்கத் தொடங்குவது சிறப்பானது என்று கருதுவதால் அன்றைய தினம் பள்ளியில் சேர்க்கிறார்கள். இந்த ஆண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பள்ளிக்கூடங்களை விஜயதசமி அன்று அதாவது நாளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது தாம்பூலத்தில் நெல்லை பரப்பி அதில் ‘அ’ என்ற எழுத சொல்லிக் கொடுக்கலாம். இதை கோவிலிலும் செய்யலாம்.
இதுதவிர புதிய தொழில் தொடங்க, புதிய படிப்பை ஆரம்பிக்க, புதிய கலையை பயில இந்த நாள் சிறப்பான நாள். மாணவர்கள் கம்ப்யூட்டர் தொடர்பாக எதையும் கற்கவும் இது சிறப்பான நாள்.
இந்த ஆண்டு விஜயதசமி 26-10-2020 அன்று திங்கட்கிழமை(நாளை) வருகிறது.
முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையே(இன்று) தசமி திதி தொடங்கிவிடுகிறது. நாளை (26-ந் தேதி திங்கட்கிழமை) பகல் 12-42 மணி வரை தசமி திதி உளளது. அதற்குள் பள்ளியில் குழந்தைகளை சேர்ப்பது நல்லது. அன்றைய தினம் பகல் 12 மணி முதல் 1 மணி வரை சுபஓரை. மேலும் கல்விக்காரகனான புதன் ஓரையும் கூட. இந்த நேரத்தில் பள்ளியில் சேர்ப்பது நல்லது. இல்லை என்றால் அன்றைய தினம் நல்ல நேரமான காலை 9-15 முதல் 10-15 வரையில் பள்ளியில் சேர்க்கலாம்.
புதிதாக தொழில் தொடங்குபவர்கள் கடை திறப்பவர்கள் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடத்தலாம்.