நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரிக்கு 3 ஆண்டு சிறை
1 min readFormer Union Minister jailed for 3 years in coal mining scam
26/10/2020
நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி திலிப் ரேக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நிலக்கரி சுரங்கம்
நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பாக சிபிஐ பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றுவருகின்றன. இதில் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 1999ம் ஆண்டு நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய மந்திரி திலிப் ரே உள்ளிட்ட அனைவரும் குற்றவாளி என கடந்த 6-ந் தேதி சிபிஐ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
3 ஆண்டு சிறை
இன்று குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில் முன்னாள் மத்திய மந்திரி திலிப் ரே உள்ளிட்ட 3 பேருக்கு தலா 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிபிஐ சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.